Maha Periyava As Shri Ra. Ganapathy Saw Him-Series 3-Part 7

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this episode by Shri Ra Ganapathi Anna, we see how a doctors ego outrages Periyava!! However is the anger real? This is just not the lesson for the doctor but many of us who think we do a lot and others have to listen to us. The danger of our anger and how it affects ourselves more than others has been explained beautifully by Sri Periyava.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.

ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—Series 3—Chapter 7

மேலே சமூகம் முழுவதிடமும் அவர் கோபம் காட்டியது கண்டோம். தனி நபர்கள் பெரும் தவறு செய்யும்போது, மிகவும் அநுசிதமாக ஒன்று சொல்லும்போது அவர்களைக் கண்டிப்பால் தண்டிக்க வேண்டியது குரு பீடக் கடமை என்ற முறையிலும் அவர்களிடம் அவர் சினம் காட்டிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. இந்த சங்கரர் அப்போது ருத்ரரூபம் கொண்டிருப்பதாகத் தோன்றும்! எவரும் அண்ட முடியாது!

ஓர் எடுத்துக்காட்டு.

டாக்டர் ஒருவர். ஸ்ரீ மடத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தவர். அவர் ஸ்ரீசரணாள் வைத்தியம் செய்து கொள்ளாமல் பொறுத்துக் கொண்டிருந்த ஒரு நோய்க்குச் சிகித்ஸை செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று மிகவும் கேட்டுக் கொண்டார். ஸ்ரீசரணர் அசைந்து கொடுக்கவில்லை. அந்த அடியாருக்குத் தம்மிடமிருந்த அக்கறையின் ஆழத்தைத் தாம் புரிந்து கொள்வதாகக் கனிவுடன் கூறி, என்றாலும் அவர் கூறிய சிகித்ஸை முறையைத் தாம் ஏற்பதற்கில்லை என்றார்.

பெரியவாள் சிகித்ஸை பெறாமலே விட்டு விட்டால் உபாதி பெரும் உத்பாதமாகவே ஆகும் என்று டாக்டர் கூறி, மருத்துவ பரிஹாரம் தேடத்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அந்தப் பரிஹாரத்தை பெரியவாள் நினைப்பது போன்ற அநாசாரங்கள் சேராமலே செய்ய வழி உண்டு என்று கூறி அவ் வழியை விளக்கினார்.

அவர் கூறியதை எல்லாம், அவரது பிடிவாதத்தையுந்தான், பெரியவாள் இன்முகமாகக் கேட்டு ரஸித்தார்.

“பக்தனா எப்டி வேண்டிக்கணுமோ அப்டி அழகா வேண்டிட்டுட்டே. டாக்டரா எப்டி எடுத்துச் சொல்லணுமோ அப்டியும் அழகாச் சொல்லிட்டே. ஆனாலும் ஒன் பிடிவாதத்தைவிட [தம் தலையில் தட்டிக் கொண்டு] இந்தப் பிடிவாதந்தான் மொரடு. [விளையாட்டுச் சூளுரையாகக் குரலை உயர்த்தி, ஆயினும் விளையாட்டு என்று நன்கு தெரியும் விதத்தில், குரல் சூடு காட்டினாலும் முகம் முழுதும் குளிர்நகையுடன்] ஒனக்கு தான் கீழ்ப்படியணுமோ?” என்றார். உடனேயே பூர்ணக் குளுமையுடன், கருணை ததும்ப, “எனக்கு ஒண்ணும் ஆயிடாது. விசாரப்படாமப் போ!” என்றார்.

அப்போது ஏனோ அந்த பக்த டாக்டர் மிகவும் அநுசிதமாக எதிர்வாதம் செய்தார். “பக்தனா, டாக்டரா மட்டும் நான் ஒண்ணு சொன்னா அதைப் பெரியவா கேக்கணும்கிறது இல்லேதான். ஆனா மடத்துக்கு எத்தனையோ காலமா நான் எவ்வளவோ செஞ்சிண்டிருக்கேன்-கிற ரைட்டின் பேர்ல………”

அவ்வளவுதான்! அவரை மேலே பேச விடாமல், காருண்ய சிவம் ப்ரளய ருத்ர கோபம் காட்டியது! பெரியவாளின் செந்தாமரை முகம் செந்தழலாயிற்று!

“மானேஜரை ஒடனே அழைச்சுண்டு வாடா!” என்று பக்கத்திலிருந்த பாரிஷதருக்குக் கடுமையான குரலில் கட்டளையிட்டார். அது போதாதென்று தாமும், “விச்வநாதா, விச்வநாதா!” என்று இடி முழக்கமாக, கையையும் சடபடவென்று தட்டியபடிக் கூப்பிட்டார்.

அப்படி பெரியவாள் கூப்பிட்டுக் கேட்டிராத மடமே கிடுகிடுத்தது.

மானேஜர் விச்வநாதையர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்.

தபோக்னியாக ஜ்வலிக்கும் பெரியவாள் கோபாக்னியாகக் கனன்றுகொண்டு கூறினார்! “இந்த ப்ரபு யதேஷ்டமா வாரிக் குடுத்திருக்கார்–ங்கிறதால, நான் – நான்—னா என்ன, ஆசார்யாளோட இந்த மடமே – இவருக்குக் கீழ்ப்படியணும்னு ரைட் காட்றார். அதனால……, நீதானே மடத்து மானேஜர்? என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, ஆதிலேருந்து இந்த க்ஷண பர்யந்தம் இவர் பண்ணியிருக்கிறதுக்கெல்லாம் கணக்குப் போட்டு, வட்டியும் போட்டு ஒடனே இவருக்குத் திருப்பிடணும். என்னையே வித்தாலும் ஸரி, ஏலம் போட்டாலும் ஸரி, எப்படியாவது ஒடனே இந்தக் கடனைத் தீத்தாகணும்.”

அப்போது மானேஜர் உள்பட சகலரும் நடுங்கினார்களெனில், டாக்டர் ஸ்தூலமாகவே சர்வாங்கமும் நடு நடுங்கினார்.

கண்ணீர் பெருக்கிக்கொண்டு, கன்னத்திலடித்துக் கொண்டு, “க்ஷமிக்கணும், க்ஷமிக்கணும்” என்று சொல்வதாக நினைத்து ஏதோ குழறிக் கொண்டு ஸ்ரீசரணாள் முன் தடாலெனத் தண்டனிட்டார்.

ஒடனே அக்னி ஐஸாயிற்று!

ஏதுமே நடவாததுபோல டாக்டரிடம் இதமாக சகஜ சம்பாஷணை தொடங்கினார், மறக் கருணையும் அறிந்த மறைமுனிவர்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

என்ற தமிழ் மறைக்குத்தான் எத்தகைய எடுத்துக்காட்டு?

அன்று அந்த டாக்டர் என்ற ஒரு தனி நபரை முன்னிட்டு போதித்த பாடம் இன்று எத்தனை பேருக்குப் பாடமாகிறது? பணத்தைக் காட்டி உரிமை நாட்டிக் கொள்வது எவ்விடத்திலுமே தகாதெனினும், குரவர்-குரு பீடங்கள் தொடர்பாகவோ இழையளவும் அந்த எண்ணத்திற்கு இடம் தரலாகாது என்ற பாடம்! இப்படி ஒரு உயர்ந்த பாடம் கற்பிக்கவே காட்டிய பயனுள்ள கோபம்! அதுதான் ‘காஞ்சி மாமுனிவரின் கோபம்’.

தமது உள்ளத்துள் கோபமில்லாமல் வெளியில் மாத்திரம் ஓர் காரணத்தை உத்தேசித்துக் கோபம் காட்டினார்; அந்தக் காரணம் நிறைவேறியவுடன், ‘காட்டியது’ சுவடும் காட்டாமல் மறைந்து ‘உள்ளதான’ உள்ளத்து அன்பே பிரகாசித்தது. ஒரே கணத்தில் அந்த எரிமலை மானஸ ஸரோவரமானது இதற்குப் பிரத்தியக்ஷ அத்தாட்சி.

“வெகுளி கணமேனும் காத்தல் அரிது” என்ற குறள் வாக்கு இவ்வுண்மையை நயமே உணர்த்துகிறது. தானாக உள்ளத்திலிருந்து மூளாமல் நாமாக வெளியே புனைந்து காட்டும் கோபத்தைத்தான் காத்துக் கொள்ளவும் அழிக்கவும் முடியும். காப்பதும் அழிப்பதும் பயின்று செய்பவையே அன்றோ? நாமே புனைந்ததால், படைத்ததால் நம் வசத்தில் உள்ள கோபத்தையே நம்மிஷ்டப்படிக் காக்கவும் அழிக்கவும் முடியும், அதுவாக மூளும் கோபமோ நம்மையே வசப்படுத்தி விடுவதால் அதனை நாம் காத்தல் –- அழித்தல் இரண்டும் எளிதில் செய்ய முடியாது.

இப்படிக் கோபவசமாகிவிடும் நம் நிலையிலிருப்பவராகத்தான் தம்மையும் வைத்துக்கொண்டு கோபத்தைத் தம் வசப்படுத்திய அந்த மஹாபுருஷன் எளியவராகச் சொல்வார்: “கோபம் கூடவே கூடாது. ஏன்னா அதுக்கு எடம் குடுத்தோட்டோம்னா அப்புறம் நம்மாலேயே அதுலேந்து லேசுல விடுபட முடியறதில்லே. எத்தனை அணைக்கப்பார்த்தாலும் அணையாமப் பொகெஞ்சுண்டே (புகைந்துக்கொண்டே) இருக்கிற வெறகாட்டமா, துளி கோவத்துக்கு எடம் தந்துட்டோமோ அது விடாமப் பொகெஞ்சுண்டு சித்தம் முழுக்கப் பொகையா வியாபிச்சுடறது.

“அதனாலதான், எப்பவுமே கோவம் கூடாது—ன்னாலும் பூஜைக்கு ஒக்காருகிறதுக்கு முன்னாடி அதுக்கு எடமே தந்துடப்படாது—ன்னு ஜாக்ரதை பண்ணிக்கறேன். [ஸ்நானம் முடித்துப் பூஜைக்கு அமரும் இடை நேரத்தில் ஸ்ரீசரணர்கள் அத்தியாவசியம் தவிர எதுவும் கேட்டுக் கொள்ள மாட்டார்; சொல்லவும் மாட்டார். அவசியத்திற்கே ஸ்வல்பமாக ஸம்ஸ்கிருதத்தில் பேசுவார்.] ஏன்னா, அந்த ஸமயத்துல கோவம் வரதுக்குக் கொஞ்சம் எடம் குடுத்துட்டாலும் பூஜை பண்றப்பவும் அதுவே உள்ளே பொகெஞ்சு பொகெஞ்சு கெளம்பிண்டிருக்கும்.”

எதிராளியை நல்வழிப்படுத்தும் நன்னோக்கத்துக்காகப் புனையும் கோபமாக இன்றி, உள்ளமே வெறுத்து அதிலிருந்து மூளும் கோபத்துக்கு ஆளாகும் நமக்கு அவர் தரும் உபதேசம்; நம் கோபம் எதிராளியை பாதிக்கலாம், பாதிக்காமலும் போகலாம். ஆனால் நம்மையே அது நிச்சயமாக பாதித்துவிடுகிறது! எதிராளி பாதிப்பே அடைந்தாலுங்கூட அதைவிட நமக்கே ஏற்படும் பாதிப்புத்தான் பெரிதாக இருக்கும். கோபம் நரம்பு மண்டலத்தை எவ்வளவு பாதிக்கிறது, தேகத்துக்கும் சித்தத்துக்கும் எவ்வளவு ஹானி உண்டாக்குகிறது என்று விஞ்ஞானபூர்வமாகவே காட்டுவதைக் கவனிக்க வேண்டும் என்பார்.

“இந்தக் காரணம்–லாம் இருக்கட்டும். நமக்கு நம்மை அழகாக் காட்டிக்கணும்னு ரொம்ப இருக்கோன்னோ? கோவம் வரச்சே மட்டும் கண்ணாடில மூஞ்சியைப் பாத்துண்டுட்டோம்—னா போறும்…..” என்று நகை புரிவார்.

மகத்தான தவறுகள், குற்றங்கள், பாபங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் ஸ்ரீசரணர்களின் சமூகத்தில் அற்றுப்படியாகித்தான் இருக்கின்றன. அப்போது சில சமயங்களில் அவர் வெகுண்டெழுந்தது போலவும், வேதனையுற்றது போலவும் இருந்ததுண்டுதான். ஆனால் இவை நிச்சயமாக அவரது உண்மையான, உள்ளார்ந்த வெகுளியாகவோ வேதனையாகவோ இருக்க முடியாது. மெய்யாலுமே அவர் வெகுண்டாலோ, அதேபோல வேதனையுற்றாலோ, வையகம் என்னாவது?” எனக்குக் கோவம் வந்துட்டா என்ன ஆறது?” என்று அவரே சொன்னாரே!

ஆம், என்னதான் ஆகும்? இன்னதான் ஆகும் என்று வரம்பு கட்டுவதற்கில்லாமல், ஒரு மஹாபுருஷன் சீற்றமுறும்போது தனி நபர்களுக்கோ, அல்லது தரணிக்கேயோ எந்தத் தீங்கும் விளையலாம் என்று புராண, இதிஹாஸங்களும் நீதி நூல்களும் கூறுகின்றன. ‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேனும் காத்தல் அரிது’ என்ற வாக்குக்குக்கூட, ’குணக் குன்றானவர்களின் வெகுளியை இந்த வையகத்தால் கண நேரங்கூடத் தாங்க இயலாது; அப்படித் தாங்குவது அரிய சாகசம்’ என்று ஒரு பொருள் சொல்வதுண்டு.

ஆனால் பெரியவாள் கோபித்துக் கொண்டதாக உலகு எத்தனையோ முறை கண்டிருந்தும் அக் கோபத்தினால் எவரும் ஹானி அடையவில்லை என்றால், அது உண்மையில் (உள்–மையில்) கோபமில்லாததால்தான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக, மஹா மஹா பொறுமைசாலி, பரம சாந்தரே எனினும் பன்முறை கோபமும் காட்டியுள்ள அவரே, “எனக்கு வந்துட்டா……” என்று கூறியதிலேயே, அவர் இத்தனை கோபம் காட்டியுங்கூட உண்மைக் கோபம் வரவில்லை என்றுதானே ஸ்பஷ்டமாகிறது?

உடனிருப்பவர்களையும், பொதுவாக உலகையும் உசுப்பிவிடுவதற்காகத்தான் அவர் வெகுளி காட்டுவதும் வேதனை காட்டுவதும் எனலாம். எத்தனையோ சமயங்களில் அவர் கனன்றெழக்கூடிய கயமைகள் தெரிவிக்கப்பட்டபோது அவற்றை ஹாஸ்யத்திற்கே விஷயமாக்கிச் சிரித்து ஜெரித்துக் கொண்டதுமுண்டு.

“மனஸில் நிற்காமல் இந்த மஹா பாதகத்தைப் பெரியவா காதுக்குக் கொண்டுவந்து விட்டோமே, சம்பந்தபட்டவர்களைப் பெரியவா சபித்துவிடப் போகிறாரே என்று பயப்பட்டேன். பெரியவாளானால் கொஞ்சங்கூடக் கோபப்படாமல் சிரித்து ஒதுக்கி விட்டீர்களே!” என்று இம்மாதிரி ஒரு சமயத்தில் ஒருவர் ஆறுதலுற்றுக் கூறினாராம். அதற்குப் பெரியவாள், “இடுக்கண் வருங்கால் நகுக…..நகுக” என்று பதில்கூறி ஒரே சிரிப்பாகச் சிரித்தார்களாம்! எதிராளியை எரிக்கும் திரிபுரதஹனனின் கோபச் சிரிப்பல்ல; மானுடச் சட்டை பூண்டிருந்ததால் தமக்கே ஏற்படக்கூடிய கோபத்தை எரிக்கும் திரிபுரசுந்தரியின் அன்புச் சிரிப்பு! ஏனென்றால் அவருக்குக் கோபம் வந்து விட்டால் உலகம் என்ன ஆவது?

இப்படி அவர் கேட்ட நிகழ்ச்சிக்குப் போகலாம்!

_____________________________________________________________________________________________________________________________

Maha Periyava As Shri Ra. Ganapathy Saw Him-Series 3-Part 7

We have just seen how He showed His anger on the whole society. There were many incidents where He showed His anger to some individual persons who committed big blunders or spoke out of turn, in order to admonish them. This Sankarar would, on such occasions, seem to have taken ‘Rudhra Roopam’. No one could go near Him!

Let us look at one such example.

There was a doctor who had been donating to Sree Matam abundantly. He was insisting that Periava should undergo treatment for a particular decease He was suffering from. Sree Saranar did not agree to it. He told him softly that He understood the concern the devotee had for Him, but could not agree to undergo his treatment.

The doctor was adamant that He should undergo the treatment and told Him that if He neglected it, it would become a serious matter. He added that there was a way of giving the treatment without breaking the customs that Periava was observing, and explained the same in detail.

Periava was listening to whatever the doctor was telling Him including his adamant attitude with a smiling face.

“You have put up your request well as a devotee should; You have also told me as a doctor should explain; But ‘this’ (tapping His head) adamancy is much ruder than yours. (He raised His voice playfully, and with a cool smile on His face, though the voice showed some heat) Must I obey you?”. Immediately, with a voice filled with tenderness, He said, “Nothing will happen to me; go without worrying yourself”.

But, the doctor devotee, (do not know why), argued further, in a manner that was out of turn. “Periava need not listen to my request as a doctor or devotee . But I have been doing a lot of services (he was indicating his donations to Sree Matam) since a long time to Sree Matam and on that right…….”

That is all ! The compassionate Sivam showed ‘Rudra KOpam’, not allowing him to say anything further! Periava’s lotus face became a reddish fire!

“Call the manager immediately”—-He ordered the attendant who was standing nearby. Not satisfied with it, He Himself called out, “ Viswanatha! Viswanatha!” in a thunderous voice, clapping His two palms.

The whole Matam was shaken as it had never heard Periava shouting!

Manager Viswanatha Iyer came running down.

Periava, who used to shine due to His ‘Tapas’, burnt with the fire of anger now and told him, “This ‘Prabu’ is showing off his right, saying that I, which means not only me but this Matam also , should obey him. You are the manager of the Matam, are you not? I do not know what you will do or how you will do, but you should calculate what he has done to Matam till this moment and return the whole amount along with interest. You must do this even if you have to sell me or auction me!”

If the manager and others were shaken by this, the doctor devotee’s body literally trembled.

Shedding tears profusely, and beating his own cheeks, he mumbled excuses (Kshamikkanum ! Kshamikkanum !) the words coming out in unintelligible babble and prostrated before Periava.

The fire became ice instantly!

He started speaking to the doctor tenderly.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

(It is impossible to bear the impact of the anger even for a moment from one who is an epitome of good qualities).

What an apt example to the above Thirukkural couplet!

The above lesson taught to the doctor that day is a lesson for many. To establish one’s right on the basis of money donated is improper; more so in matters relating to Guru and Guru Peetam. The anger shown that day was meant to teach us a moral lesson. That is Kanchi Munivar’s anger!

With no feeling of anger in the depth of His heart, He showed temper for a purpose. Once that purpose was served, the anger disappeared without leaving any trace and the true love inside Him shone! In one second the volcano changed into a ‘MAnasa SarOvar’.

The line “வெகுளி கணமேயும் காத்தல் அரிது” from Thirukkural conveys this truth to us. We can protect and destroy only that anger which does not arise from our heart voluntarily, but produced by us (for a good cause). Protecting and destroying is done by learning. Because we produced it, we can protect and destroy the anger which is under our control, as per our will. On the contrary, the anger which arises voluntarily will control us and hence we can neither protect nor destroy the same easily. He, the great soul, who places Himself in our position who get angry voluntarily, but controls His anger, tells us “Anger must be totally abandoned, because, once we give room for it, then we cannot escape from its clutches. It will be burning (He uses the Tamil word for ‘smoking’) forever like a smoking log and the whole mind is occupied by that smoke.

“That is why, I take precautions before starting the Pooja in order not to give room for it. (After His bath, but before sitting for the Pooja, He will not listen to any matter unless something is absolutely necessary to be heard; nor will He say anything. He will speak in Samskrit, when He needs anything). Because, if I give room for anger at that time, then it will keep steaming all through the Pooja.”

This is the advice that He gives us who submit ourselves to the anger that emanates from the heart filled with hatred contrary to the produced anger with the sole purpose of pacifying the enemy and correcting him:

Our anger may or may not affect the enemy; but it certainly affects us! Even if the enemy is affected by it, the impact that it has on us is much bigger. We should note how science itself shows how anger affects our nervous system, and how it harms our health and mind.

“Let us keep aside all these reasons; are we not keen on showing ourselves as being very beautiful? It is enough if we look at our face in the mirror at the time of being possessed with anger.”—-This is what He will say with a smile!

There were plenty of details of blunders, offences and sins being brought to His attention. During some of those times it had seemed that He became very angry or He was in great pain. But certainly those could not have been His heart felt feelings. What would have happened to the world if He really got angry or felt the pain? Did He not Himself say, “What happens if I get angry?”

Yes, What will happen? PurAnAs, ItihAsAs and other books on morals say that any harm—without any limit on it—-can come to individual persons or the whole world. Even the above quoted line from Thirukkural means that the world can never bear the anger of those who are the epitomes of good qualities.

But, though the world had seen Periava getting angry, many times, no one came to any harm due to that anger, which means that the anger was not a real one.

Over and above all these, when He, the epitome of patience and equanimity, though He has shown His anger many a times, says, “If I get angry….”, then it only shows that He has not got angry yet!

His anger and pain are meant only to wake us up and incite us. Many a time, when He was informed of incidents which should normally make one angry, Ha has just laughed them off.

Once a devotee told Him, “I was afraid that Periava would curse those involved in some inexcusable crimes, when I brought it to your notice. But Periava! You just brushed it aside and laughed without getting angry!” To this Periava simply told him, “just laugh when you are in deep trouble or sorrow!” and laughed aloud! It was not that angry laugh of Rudran, which will burn down the enemy; it was that affectionate laugh of Thripurasundari, which will burn down the anger that He may get because He was wearing the human form. Because, what will happen to the world if He gets angry!

Let us go to that incident when He asked this question.

TO BE CONTINUED………..

இதை பகிர:

எங்களை தொடர்பு கொள்ளவும்