Jaya Jaya Sankara Hara Hara Sankara – How does Sri Periyava express love in the form of anger? How is his anger different from ours? How does voluntary anger different from produced anger? All this anger for the welfare of women and lokha kshemam. Shri Ra Ganapathy Anna continues his experiences with Maha Periyava.
Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.
ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—Series 3—Chapter 6
கண்ணீரும் கோபமும் என்பதுதானே நம் தலைப்பு? கனிவில் கண்ணீர் பெருக்கிய முனியர் முனிவு கொண்டு ”எனக்குக் கோவம் வந்துட்டா என்ன பண்றது? என்று கேட்ட விஷயத்திற்கு இங்கு செல்கிறோம். ஏனெனில் அன்று கண்ணீரே கோபமாயிற்று ! கடலிடையே வடவைத்தீ என்பார்களே! அப்படி கருணைக் கடலிலிருந்தே கோபத் தீ மூண்டது தார்மீக கோபம் என்பதன் சத்திய வடிவம் அது!
அன்று பொதுப் பிரசங்கத்திலேயே வெடித்தார். கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக் கொண்டு ஓடிய நம் கன்யாக் குழந்தைகள் ‘ஆகுமா? ஆகுமா?’ என்று அலறிக் கொண்டு கேட்கிற ஹீனஸ்திதிக்கு நாம் ஸமூகத்தைக் கொண்டு வந்து விட்டிருப்பது நியாயமா என்று தழல் பறக்கக் கேட்டார். சாஸ்த்ர ஸம்ஸ்காரமான விவாஹத்தைப் பொருளாதாரப் பிரச்சினையாக்கிப் பெண்ணுக்கும் அவளைப் பெற்றோருக்கும் தீங்கு செய்வதோடு மட்டும் இது முடியவில்லை என்றும், இதனால் நம் வேத மரபுக்கே மூல ஸ்தானம் போன்ற ஸ்த்ரீ தர்மத்தைக் குலைக்கும் மஹா பாபமும் சேர்கிறது என்றும் விண்டு காட்டினார். இனி, பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் வரதக்ஷிணை, சீர் செனத்தி கேட்கவே கூடாது என்று கண்டிப்பாக ஆணையிட்டார. மேலும் ஒரு படி சென்றார்.—-திருமண அழைப்பிதழ்களில் ‘காஞ்சி ஜகத்குருவின் ஆசியுடன’ நடப்பதாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளதல்லவா, வரதக்ஷிணை வாங்கும் கல்யாணங்களில் அப்படிப் போட வேண்டாம் என்றார், ஆம் அனைத்துயிர்க்கும் ஆசி தரவே வந்த அன்பவதாரர்தாம்!
அதற்கு மேலும் ஒரு படி சென்றார். சாஸ்த்ர விதிகளை அணுவும் இளக்கப் பிரியப்படாத மரபின் மஹாகாவலர் என்பதுதானே சமீபகால மஹான்களிடையே ஸ்ரீ சரணர்களுக்கேயான தனிச் சிறப்பு? அப்படிப்பட்டவர் அன்று, தாய் தந்தையர் கருத்துக்கு மாறாக மக்கள் ஒரு போதும் செல்லக் கூடாது என்று சாஸ்திர விதியையே வலியுறுத்தும் தாம்; மாதா—பிதா—குரு என்றே வசனமிருப்பதால், பெற்றோருக்குப் பின்னரே வரும் குருவான தம் கருத்துக்கும் மேலாகப் பெற்றோர் கருத்தையே மதிக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் உள்ள தாம்; இந்த ஒரு விஷயத்தில் மட்டும் மாறுதலாக அபிப்பிராயப்படுவதாகக் கூறினார். அதாவது, பெற்றோர்கள் தம் உத்திரவைக் கேளாவிட்டாலும் கூட வரனாக உள்ள மக்கள் அவர்களது ஆக்ஷேபணைக்குப் பணியாமல், ‘வரதக்ஷிணை வாங்காவிட்டால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் கல்யாணமில்லாமலேதான் இருப்பேன்’ என்று தீர்மானமாகக் கூற வேண்டும்’ என்றும் கூறினார்.
அதன் பின்னரும் நம் ‘அழகான’ சமூகம் அவர் கூறியபடி அப்படியே திருந்தி விடவில்லை. எனினும் நூற்றுக்குப் பத்து—இருபது பேராவது நிச்சயமாக மனமாற்றம் பெறவே செய்தனர். நமது பெரிய மக்கட் தொகையில் அதுவே ஆயிரக்கணக்காக இருக்கும். மஹாபுருஷரொருவரின் தார்மீக கோபத்தாலன்றி வேறெவ்விதத்திலும் சாதிக்கவொண்ணாத சாதனைதான் !
‘கோபமுள்ளவிடத்தில் குணமிருக்கும்’ என்பார்கள். ஸ்ரீ சரணாள் விஷயத்திலோ அனந்த கல்யாண குணநிலயமான அவரிடம் அக் கல்யாண குணங்களில் ஒன்றாகவே கோபமும் இருந்தது. அதனால்தான் பிறரை அது குணப்படுத்தி, குணவான்களாக்க முடிந்தது !
“எனக்குக் கோபம் வந்துட்டா என்ன ஆறது?” என்று அவர் கேட்டதைத் தொடக்கத்தில் பார்த்தோம். அவரது கோபத்தால் பயங்கரமான பாதிப்பு உண்டாகும் என்ற விடை அதிலே தொக்கி நிற்கிறது. ஆனால் இங்கோ அவருக்குக் கோபம் வந்ததில் நல்லதுதானே விளைந்திருக்கிறது என்று தோன்றலாம்.
ஆயின் இந்தக் கோபமுள்ளத்தின் அடியிலும் கோபமாகவே இருந்து வந்ததல்ல. அந்தத் திருவுள்ளத்தின் அடியிலிருந்தது—ஸதா ஸர்வ காலமும் இருந்தது—லோக க்ஷேம சிந்தனைதான்; தர்ம வாழ்வு தழைக்க வேண்டும் என்ற ஆசைதான்; சுருங்கச் சொன்னால் அன்புதான்! அதன் ஒரு வெளிப்பாடாகவே கோபக் கீற்றும் சில சமயங்களில் வெடித்தது; ஜலமயமான மேகங்களிலிருந்தே மின்னல் கீற்று வெடிப்பதைப்போல. ஆனால் இந்த மின்னல் மின்சாரமாக உத்பாதம் செய்யாமல் இன்சாரமாகவே உயர்வு அளிக்கும்.
உள்ளே உள்ள அன்பே வெளியே கோபமாகும்போது, ‘அவர் கோபம் கொண்டார்’ என்றால் அது சரியாகாது. ‘அவர் அன்பையே கோபமாகக் காட்டினார்’ என்றால்தான் சரியாகும். எனவே, ‘என்ன ஆறது?”க்கு விடையும் இங்கே மாறுகிறது.
மடமே கிடுகிடுத்துப் போவது போல ஸ்ரீ சரணர் கோபம் காட்டிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்திருப்பதுண்டு. அவர் ‘கோபம் கொண்ட’ நிகழ்ச்சிகள் அல்ல; ‘கோபம் காட்டிய’ நிகழ்ச்சிகள். புராணங்களில் தெய்வ புருஷர்கள் தங்களுடைய சத்ருக்களைத் தாக்கும்போது ‘கோபம் சகார’ என்று குறிப்பிட்டிருக்கும் கோபத்தை உண்டு பண்ணிக் கொண்டனர்’ என்று பொருள். தானாகக் கோபம் மூண்டு வராமல், தண்டித்துத் திருத்தும் நன்னோக்கில் கோபத்தைப் பயின்று கைக்கொள்வதைத்தான் அப்படிக் குறிப்பிடுவது. தானாகக் கோபம் மூள்கிறதெனில் நெஞ்சிலேயே வெறுப்பு இருக்கிறது என்று அர்த்தம். பயின்று மூட்டிக் கொள்வதோ உள்ளூர வெறுப்புணர்ச்சி இல்லாத அன்பின் ஸாத்வீகத்திலேயே தண்டிக்கும் ரஜோகுணத்தை பாவனையாக உண்டாக்கிக் கொள்வது. ஸ்ரீ சரணரின் கிடுகிடாய்க்க வைக்கும் கோபம்—‘சோ கால்ட்’ கோபம் இப்படிப்பட்டதே என்பது அவர் வாய்மொழியாலேயே பெறப்படுகிறது. “எனக்குக் கோவம் வந்துட்டா என்ன ஆறது?” என்பதாக அதனை இதுவரை ‘வராத’ ஒரு விஷயமாகச் சொன்னாரென்றால்?
__________________________________________________________________________________________________________________________
Maha Periyava As Shri Ra. Ganapathy Saw Him-Series 3-Part 6
‘Tears and Anger’ is our title, is it not? Let us look at Periava’s question “What happens if I get angry?” —-Periava who shed tears out of compassion. Because on this occasion, tears themselves turned into anger; similar to the submarine fire in the sea. The fire of anger emanated from the ocean of compassion ! It was the ‘Satya Roopam’ of ‘DhArmic anger’ !
He exploded that day in the public audience itself. He asked, “Is it justified that we have brought the society to such a low level where our ‘KanyA Stree’s (unmarried girls), who once upon a time, blushed and ran away at the mere mention of marriage, due to shyness, are now crying woefully , ‘Will I ever get married?’?. This has not ended with harming the girl and her parents by making the marriage—a sanctified SAstric event—-into an economic burden; we are adding to our bag of sins another sin which destroys the root of ‘Stree Dharmam’.”
He gave an unequivocal order that the family of the groom should not demand ‘Varadhakshinai’ and other gifts from the bride’s party. He went a step ahead and said, that the practice of mentioning “ ….solemnized with the blessings of Kanchi JagatGuru” in the marriage invitation should not be followed in those marriages where Varadhakshinai is demanded and received. Yes ! The epitome of compassion only gave such an order !
He went still one more step ahead. Among all the great souls of His time, Sree Saranar had the special honour as the ‘Protector of our ancient customs’, who would never like to dilute the rules of the SAstrAs. He had always insisted that children should never act against the opinions of the parents; the priority line being ‘MAtA—PitA—Guru—Dheyvam’ (Mother—Father—Guru—God), He had always held that children should respect the words of their parents than His (Guru’s) words, as the Guru comes behind the former. But, He said that in this matter He had a different opinion. He said, “Even if the parents refuse to listen to His order, the children, who are the ‘would—be—grooms’ should not listen to their parents but should unequivocally say that they would get married only if parents do not demand ‘Varadhakshinai’ and if otherwise, they would remain unmarried.
Even after this our ‘wonderful’ society did not correct themselves; but at least ten percent of them did have the change of heart, which would amount to a few thousands. Certainly, this was a big achievement which would not have been possible but for Mahaperiava’s ‘Dharmic anger’ !
There is an old saying “where there is anger, there will exist good character too”. In the case of Sree Saranal, anger was one of the many ‘Kalyana Guna VisEsham’s. That was why, it was able to cure many and make them good humans.
In His question, “what will happen if I get angry?”, there seems to be an answer that, there would be dire consequences from it. But we will think that only something good has resulted from His anger.
But this anger did not emanate as anger from the depth of His heart. What existed forever in that compassionate heart was only thoughts of ‘LOka KshEmam’ (welfare of the world); and the desire that ‘Dharmic life’ should prosper. In short it was pure Love. Anger, on some occasions, was only an expression of that Love, just like a lightning strikes from the water—bearing clouds. But unlike that lightning (electricity) which harms us, this ‘electricity’ only uplifts us.
When the love in His inner heart comes out as anger, it is not correct to say that ‘Periava got angry’; It is only correct to say that He showed His love as anger outside. Therefore the answer to the question, “What happens….?” changes here.
There have been some occasions in SriMatam, when Sree Saranar got angry which had shaken the Matam. But on those occasions, He did not ‘get angry’ but only ‘expressed His Love as anger’. In PurAnAs, Divine beings, while attacking their enemies, it would be mentioned as “KOpam sakAra” which means that they ‘produced anger in themselves’. Instead of getting angry voluntarily, they practice it with the objective of punishing them and correcting them in the process. If anger shows voluntarily, it means that hatred is present in the mind. On the other hand, bringing out anger , in order to punish the wicked with the help of the tender heart without any feeling of hatred is different. His very words, “What will happen if I get angry?” indicate that His ‘so—called anger’ is of the latter type. When He, who had on a few occasions shown that ‘He got’ angry, says “what happens if I get angry?”, it means that He is talking of something which has not come till then !
TO BE CONTINUED……..