Jaya Jaya Sankara Hara Hara Sankara – What are some of the other instances when Sri Periyava shed tears? Why is it so? Shri Ra Ganapathi Anna continues.
Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.
ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—Series 3–Chapter 3
முத்துக்களை வெளியில் காட்டாமலே ஆழத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது ஆழி. பொன்னையும் மணியையும் இவ்வாறே உள்ளுக்குள்தான் புதைத்துக் கொண்டிருக்கிறது பூமி. கடலையும் நிலத்தையும் போன்ற மஹத்தான பரிமாணமுடையவர் நமது மஹாபெரியவர்கள். அந்த எளிய சிற்றுருவுக்குள் ஒரு விச்வாகாரமே உண்டு. கடலையும் நிலத்தையும் போலத் தமது முத்தான, பொன்னான, மணியான அநுபவங்களை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் பொதிந்து வைத்துக் கொண்டிருப்பதில் அவர் சதுரர். ஆயினும் ஒரொரு ஸந்தர்ப்பங்களில் அவரது உட்கரு உள்படப் புரட்டி எடுக்கும் பேரநுபவம் வாய்க்கும்போது அந்த மலையான முத்து — பொன்மணிக் குவியலில் ஒன்றிரண்டை வெளிப்படச் சிந்தி விடுவார்!
இவ்வாறு தெய்விகமான பக்தி பரவசத்திலும், தெய்வ மா கருணையிலும் அவர் கண்ணீர் முத்துச் சிந்திய ஓரிரு நிகழ்ச்சிகள் பார்க்கலாம்.
************
முத்து நகைக்கு –- அடியார் அர்ப்பணித்த திருவாபரணமாகிய முத்து நகை, அவளே திருவிதழில் பூக்கும் மந்தஹாஸமாகிய முத்து நகை ஆகிய இரண்டுக்கும் -– பெயர் பெற்றவள் மதுரை மீனாக்ஷி. அவள் மீனாக்ஷி பெயர் பெற்றிருப்பதோ கண்ணழகை வைத்தேயாகும். மீன் போன்ற கண் வாய்ந்தவளாதலாலேயே அவள் மீனாக்ஷி; அங்கயற்கண்ணி. அவளது சந்நிதியில் ஸ்ரீசரணர்களின் கண்கள் நீர் முத்துச் சொரிந்தது மறக்கவொண்ணாத நிகழ்ச்சி.
1961 சங்கர ஜயந்தி சமயத்தில் மதுரை மாநகருக்கு எழுந்தருளிய ஸ்ரீசரணர்கள் அம்பாள் சந்நிதி சென்று அவள் முன் நின்றவுடன் என்னவெல்லாம் அநுபவம் கண்டாரோ, யாரே அறிய முடியும்? முப்பத்து மூன்றாண்டுகளுக்கு முன் அவர் பிரவேசித்த சந்நிதி. அதற்குப் பிற்பட்ட நீண்ட இடைக் காலத்திலும் அம்பாள் இடையீடின்றி அவர் நெஞ்சிலேயே சந்நிதி கொண்டுதானிருந்தாள். ஸ்ரீ மடத்து அதி தேவதையான காமாக்ஷியே சக்ரவர்த்தினியான லலிதாம்பிகை என்றும், மீனாக்ஷி அவளுக்கு மந்த்ரி மட்டுமே ஆனதால் மந்த்ரிணி என்றே கூறப்படும் சியாமளாம்பிகைதான் என்றும் கொள்வதுண்டாயினும், ஸ்ரீசரணர்களோ அந்தக் காமக்கண்ணி, இந்த கயற்கண்ணி இருவருக்குமிடையே மாறுபாடு காணாமல் இருவரையும் இரு கண்களாகப் போற்றி வந்திருப்பவர்கள்.
சற்றே விந்தையானதொரு விஷயம், ராணி காமாக்ஷியின் மந்திரி மீனாக்ஷி எனில், அவளுடைய சேனாதிபதியே ஆனைக்கா அகிலாண்டேச்வரி என்பர். ஆனால் நடைமுறையில் இந்த சேனாநாயகி — மந்திரிணிகளையும் ராணியான பூர்ணபிரம்மசக்தியாகத்தான் உலகம் வழிபட்டு வருகிறது. அத் தேவியரும் அவ்வாறே அருள் சொரிந்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க –- காஞ்சி காமாக்ஷியுடனேயே நமது ஸ்ரீமடம் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. அவளே அதன் சக்தி மூலம். அவளுடைய காமகோடி பீடமே மடத்தின் பீடமுமாகும். எனினும் விந்தையாக, பெரியவாள் முதலில் அகிலாண்டேச்வரியையும், அப்புறம் மீனாக்ஷியையும், அதன்பிறகே காமிக்ஷியையும் தரிசித்திருக்கிறார். (உலகு கண்ட வெளி தரிசனத்தைத்தான் சொல்கிறோம்.) பட்டமேற்ற மறு ஆண்டான 1908-லேயே, தமது பதிநாலாம் பிராயத்திலேயே திருவானைக்காவில் அகிலாண்ட நாயகியை தரிசித்துக் கும்பாபிஷேகம் செய்தார். 1922-லும், 1928-லும் இருமுறை மாமதுரை மீனலோசனையைத் தரிசித்தார். 1931-ல்தான் முதன் முறையாகக் காஞ்சி சென்று காமேச்வரியைக் கண்டார்.
மூல காமாக்ஷியை அவர் கண்டது பிற்பாடு என்றாலும், அவளுடனேயே கச்சியிலிருந்துவிட்டு பிறகு தஞ்சை சென்று கோயில் கொண்ட பங்காரு காமாக்ஷியைத் திருவானைக்காவில் 1908-ல் நடந்த சதுர்மாஸ்யத்திற்குப் பிறகு கும்பகோணம் திரும்பும் வழியில் தரிசித்திருக்கிறார். இது பற்றி அவர், “ஆனா அங்கே காமாக்ஷியையே மீனாக்ஷியாதான் பார்த்தேன்” என்று புதிர் போட்டிருக்கிறார்! அப்புறம், தஞ்சைக் காமாக்ஷி காஞ்சி காமாக்ஷி போல் நாற்கரத்தினளாகவும், அமர்ந்த கோலத்திலும் இல்லாமல் மீனாக்ஷியாகவே இரு கரத்தினளாக, ஒன்றில் கிளி ஏந்தி, மற்றதைத் தொங்கவிட்டு, நின்ற கோலத்தில் இருப்பதைச் சொல்லிப் புதிரை அவிழ்த்தார்.
ஆதி ஆசார்யாள் அகிலாண்டேச்வரிக்கு ஸேனா நாயகிக்கான கிரி சக்ர தாடங்கம் அணிவிக்காமல் ஸ்ரீ சக்ர தாடங்கமே அணிவித்திருப்பதால் அவளையும் ராணி லலிதை (காமாக்ஷி)யாகவே அவர் கருதியது தெரிகிறது. காமாக்ஷி போலவே அகிலாண்டேச்வரிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துடன் விசேஷத் தொடர்பு உண்டு. மீனாக்ஷிக்கு அப்படி ஏதும் இல்லை. ஆயினும் அவளைக் குறித்து ஆசார்யாள் செய்துள்ள ‘பஞ்சரத்னம்’, ‘அஷ்டகம்’ இரண்டும் அவளை அவர் ராணி லலிதையாகவே கொண்டாரெனத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த ராணியைத் தாயாக அநுபவித்து உருகியிருப்பதையும் காட்டுகின்றன. நமது ஸ்ரீசரணாளுக்கும் மீனாக்ஷி என்றால் ஓர் அலாதியான பக்தி நெகிழ்ச்சி. உள்ளத்தே திடமாக உறைவித்துக் கொண்ட அவளை வெளிப்படக் குறிப்பிடுகையில் மெழுகாகித்தான் விடுவார்.
அந்த 1961-ம் ஆண்டு தரிசனத்தின்போது உளத்தே உள்ள அவளை வெளியே கண்டவுடன் அவராலுமே கட்டுப்படுத்தவொண்ணாததோர் ஆனந்த பரவசம் கூடியிருந்திருக்கிறது! முதலில் வைத்த கண் வாங்காது தாயை நோக்கியது நோக்கியபடி சிலையாகத்தான் இருந்தார். ஆனால் பட்டர் உச்சகோஷகமாக அர்ச்சனை தொடங்கி முதல் நாமத்தைக் கூறிப் பங்கயப் பாதத்தில் குங்குமம் போட்டாரோ இல்லையோ, பொங்கி வெடித்தது முனி புங்கவரின் பக்தியுள்ளம்! நிலைக் குத்திட்ட பார்வையைத் திரையிட்டுக் கொண்டு தாரை தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுக்கலாயிற்று!
கண் மட்டுமா பொழிந்தது? அவரது ஆவியே உருகி உடலை உருட்டிப் புரட்டுப் பிழிந்து கண்வழியாக மடை பெருக்குவதுபோலத் திருவுடல் முழுதும் பட படவென ஆடலாயிற்று -– சண்ட மாருதத்தில் சிக்கிய மெல்லிய காகிதத் துண்டுபோல! இந்தக் கால (1993)ப் பெரியவாளாக இன்றி எவரும் தொடுவதற்கில்லாமலிருந்த அந்தக் காலப் பெரியவாள் விழுந்து விடப் போகிறாரே என்று உடன் வந்த பரிஜனங்கள் அஞ்சினாலும் கட்டிப் பிடிக்கவும் அஞ்சி அவர்களும் ஒரு விதத்தில் நிலை கொள்ளாமல் தத்தளித்தனர். முடிந்த மட்டும் பாதுகாப்பாக அவரைச் சூழ்ந்து நெருக்கமாக நின்றார்கள்.
என்பெலாம் உருகியுக்கிட்(டு) என்னுடை நெஞ்சமென்னும்
அன்பினால் ஞானநீர் கொண்(டு) ஆட்டுவன் அடியனேனே
என்றார் ஆழ்வார். அன்பு என்பது த்வைதமான பக்தி. அதுவே த்வைத உணர்வை உருக்கி அத்வைத ஞான நீராக்கும் அரிய நிலையில் த்வைத அநுபவத்திற்கே ஏற்பட்ட உடலும் எலும்பு உள்படப் பூரணமாக நெக்குருகினாற்போலாகி அந்த ஞான நீரைக் கண்ணீராகக் கொட்டிவிடுகிறது. பக்த ஞானி தன்னையும் மண்ணையும் அக் கண்ணீரால் நனைத்துக் கொண்டாலும் அது அத்வைத ஞான நீரானதால் அவனிடமிருந்து பிரிந்திராத தெய்வத்திற்கே புரியும் அபிஷேகமாகிறது.
பாஷ்பதாரையால் தம்மையும் தரணியையும் நீராட்டிக் கொண்டு மீனாம்பிகைக்கும் அபிஷேகம் புரிந்துவிட்ட நம் பக்தி ஞானச் செல்வர் இரண்டாண்டுகளுக்குப் பின் நடந்த அவளது மஹாகும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். இப்போது அம்பாளிடம் த்வைத — அத்வைதத்தில் இழைந்து குழைந்து கண்ணீர் பெருக்கும் அவர் அக் கும்பாபிஷேகத்தின்போது ஒற்றுமையுணர்வின் அத்வைதத்தாலும், அன்பின் த்வைதத்தாலும் அத்தனை மானுடராகவும், ‘Everyman’ ஆக, நின்ற அற்புதத்தை அமெரிக்க அரசுத் தூதர் ஃப்ராங்க்ளின் சொல்லிக் கேட்க வேண்டும்!
_________________________________________________________________________________________________________________________
Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 3-Part 3
The ocean is hiding the pearls without showing them out. The earth is hiding the gold and diamond the same way. Our MahAPeriavar is also of the same measure as the ocean and earth. A huge ‘VisvAkAram’ (universe) is present inside the small figure. Like the ocean and the earth, He is very skilled in hiding His golden experiences inside the depth of His mind. But yet, at times, when He experiences something great which shakes His body and soul, He will shed one or two of those pearls and gold.
We will look at some of those incidents, where He shed His pearl—like tears out of some Divine ecstasy or compassion.
Madurai MeenAkshi is famous for Her pearl studded ornament—-both the ornament offered by the devotees as well as the pearl—like smile on Her lips. She got Her name because of the celestial beauty of Her eyes—MeenAkshi, ‘Ankayarkanni’ because She has eyes like fish ( ‘Meen’ in Tamil means fish). It is an unforgettable incident when Sree Saranar shed tears in Her sanctum sanctorum.
During the Sankara Jayanti time in the year 1961, Sree Saranarkal, who had come to Madurai, went and stood before Her in AmbAl ‘Sannidhi’. Who knows what He experienced then? It was a ‘Sannidhi ’ to which He is returning after thirty three years. But in those thirty three years also She had been in His heart always. Sree Kamakshi, who is the reigning deity of Sree Matam, is considered as LalithAmbikai the Empress; Meenakshi is Her minister only; therefore, Meenakshi is also considered as Shyamalambikai the ‘Manthrini’; But Sree Saranar found no such difference between the ‘KAmakkanni’ (Kamakshi) and the ‘Ankayarkanni’ (Meenakshi) and had all along worshipped them as His two eyes.
Something is amazing here ! While Meenakshi is the minister to the empress Kamakshi, then, ‘AnaikkA’ (ThiruvanaikkA) Akilandeswari is considered to be Her commander-in-chief. But, the world is worshipping these Minister and the commander -in -chief as the ‘whole Brahma Sakthi’ only. Those ‘Devi’s’ also are showering their blessings on them. That apart, Our Matam has been intertwoven with Sree Kamakshi. She is the Sakthi behind it. Her Kamakoti Peetam is also Matam’ Peetam. However, strangely, Periava had Darsan of Akilandeswari first, then Madurai Meenakshi and then only Kamakshi (We are talking about His Darsan as seen by the outside world). The very next year after He ascended the Peetam, 1908, in His 14th year, He had Darsan of Akilandeswari of Thiruvanaikka, and performed the ‘Kumbabishekam. In 1922 and 1928, He had Darsan of Madurai Meenakshi. In the year 1931 only, He went to Kancheepuram and had Darsan of Kamakshi. Although He had Darsan of ‘Moola Kamakshi’ (Kanchi Kamakshi) only at a later time, He had Darsan of Bangaru Kamakshi (who had been with Kanchi Kamakshi initially and later came to Thanjavur), in 1908 while returning to Kumbakonam after the Chaturmasya Vratam in Thiruvanaikka temple. He had said about this Darsan, “But I saw Kamakshi as Meenakshi only”, throwing a puzzle ! He Himself solved the puzzle later explaining that Thanjai Kamakshi gives Darsan , standing with two hands, the parrot in one hand and the other hanging down like Madurai Meenakshi unlike Kanchi Kamakshi who is in the sitting position with four hands. It is seen that He worshipped Akiandeswari as ‘RAni Lalithai Kamakshi) only, as He decorated Her ears with the ‘Sri Chakra ThAdankam’ instead of the ‘Giri Chakra ThAdankam’ meant for Akilandeswari, the commander—in—chief. Akilandeswari has a special connection with Kanchi Matam, where as Meenakshi does not have any. But, ‘Pancha Ratnam’ and ‘Ashtakam’, two works authored by Adhi Sankaracharyar, go to prove that HE considered Meenakshi as Rani Lalithai only. They also show that HE had thought of Her as His own mother and melted at the experience. Our Sree Saranal also had a special devotion towards Meenakshi; He would melt like a wax while talking about Her, whom He had established in His heart firmly.
In that year 1961, when He had Her Darsan, He had been overwhelmed by an uncontrollable ecstasy. First, He just stood like a statue, not removing His eyes from Her figure.
But when the Purohit started the ‘Archana’ in a high pitched voice, and uttered Her first Nama and offered Kumkum at Her lotus feet, the Sage’s Divine soul burst open! Tears started flowing down His transfixed eyes !
Not only the eyes showered, but also His spirit melted and shook the whole body—-like a piece of paper caught in a whirl wind. Unlike ‘the Periava of today’, none could touch Him then. Though the attendants who were with Him were scared that He would fall, they were afraid of holding Him and were themselves struggling with the situation. They could only stand around Him as a shield.
Azhvar said,
என்பெலாம் உருகியுக்கிட்(டு) என்னுடை நெஞ்சமென்னும்
அன்பினால் ஞானநீர் கொண்(டு) ஆட்டுவன் அடியனேனே
(Let my bones melt; and let me bathe you with my love)
Love is a ‘Dvaita Bakthi’; when it melts the ‘Dvaita conscience’ and converts it into ‘Advaita wisdom’, the body and bones made for ‘Dvaita experience’ melt down and come out as tears. The devoted wise man, though he drenches himself and the earth with those tears, also anoints the Supreme Divine which is one with him.
Periyava, The Epitome of Devotion, who anointed Himself and the world and Meenakshi with His tears, participated in the ‘Maha KumbabishEkam’ of Sree Meenakshi, after two years. He, who was overwhelmed with tears two years ago, stood as ‘everyman’ now with the conscience of ‘Dvaita love’ and ‘Advaita togetherness’. We should hear this amazing experience from the American consul General Franklin !
TO BE CONTINUED………