Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 2-Part 1

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Shri B. Narayanan mama has starting the second part of the series, Shri Maha Periyava as Shri Ra Ganapathy Anna saw him. Thank you mama for the awesome chapter, translation, and drawing.

In this episode, the take away for me is this following line: “நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள். ‘அவரைப் போற்றிப் பெருமை பேசிவிட்டால் போதும்; அவர் தம்மைப் போற்றிப் பெருமை படுமாறு ஏதுமே செய்யாமல் நம் வழியிலேயே போகலாம்’ என்றுதான் இருந்திருக்கிறோம்.”

How much impact and pain it would have had on Anna to write this? Irrespective of our attitude, Sri Periyava’s Karunyam stands out. Rama Rama

நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு !

‘சரணம்’, ‘ஹஸ்தம்’ ஆகிய இரு பதங்களுக்குமே தாங்கி என்ற பொருள் உண்டு. தாங்குவது தாங்கி (support). சரண கமலத்தால் அடைக்கலம் தந்தும் ஹஸ்த கமலத்தால் அபயம் தந்தும் எண்ணிறந்த அடியரைத் தாங்கிய திவ்யத் திருமேனி மறைந்து விட்டது.

ஆனால் தாங்கும் அப் பேரருளை அந்த மேனியும் அதன் அவயவங்களுமா புரிந்தன? பௌதீகமான பொருட்களைத்தான் பௌதீகமான மேனி தாங்க முடியும். அடியாரின் மனச் சுமையை ஒரு பௌதீக மேனி எப்படித் தாங்க முடியும்? அதைத் தாங்கியது பராசக்தியின் பரங்கருணைத் தத்வந்தான். அது எக்காலத்தும், எவ்விடத்தும் உள்ள அமரமான, ஸர்வ வியாகபமான ஒன்று. ஆயினும், அந்த ஸூக்ஷ்ம சக்தியைக் கிரஹிக்க மாந்தரால் இயலாததால் அவர்களுக்கு அவதார சரீரங்களைக் காட்டி அவற்றைக் கருவியாகக் கொண்டு தனது தாங்கும் தண் பேரருளைப் புரிகிறது. எனினும் பராசக்தியின் விளக்கவொண்ணா விளையாடலில் சரீர தர்மமாக இவ்வளவுதான் ஆயுட்காலம் என்று விதி செய்யப்பட்டு அதோடு சரீரம் முடிக்கப்பட்டும் விடுகிறது; அவதார சரீரமும்தான்! இவ்வாறிருந்தாலும் அந்த ஆயுட்காலத்தில்கள் சரீரி ஆற்றிய தாங்கும் திருப்பணியின் பெருமையிலிருந்தே அடியார்கள் அவரை ஒரு சரீரத்தில் அடக்க ஒண்ணாத அருட்சக்தியாகப் புரிந்துகொள்ள இயலும்.

எனவே, ஒரு அவதார சரீரம் விழும்போது, நம் கண் காண, செவி கேட்க, உள்ளம் குளிர அது புரியும் நவ நவ ஸுந்தர லீலைகள் முடிந்து போவதால் துயரம் பொங்கி எழுவது இயல்பே யாயினும் பிரார்த்தனையால் மனம் தெளிந்து பார்ப்போமாயின், சரீரமல்ல நம்மைத் தாங்கிக் காத்தது என்றும், அது தாங்கும் சக்தி, காப்புச் சக்தி இன்றும் நம்மைச் சூழ்ந்தும், ஊடுருவியும் உள்ளது, இனி அது என்றும் அவ்வாறே இருக்கும் என்றும் உணரலாம். வெறும் வாய் ஜோடனையாகவோ, மனோ கல்பிதமாகவோ இன்றி மெய்யாலுமே உணரலாம்.

“ஜீவேம சரத: சதம்” என்ற வேத வசனத்துலிருந்து, ஒரு குழந்தை தும்மினால் கூட “சதாயுஸ்” என்று சொல்லும் பொது வசனம் வரை நமக்குத் தெரிவிப்பது, ஒரு சரீரத்தின் அதிக பக்ஷ ஆயுட்காலம் நூறாண்டு என்பதே. “நூறுதல்” என்றாலே அழிதல் என்று பொருள்!

அப்படிப்பட்ட அதிக பக்ஷக் கால அளவாக்கும் ஸ்ரீசரணர்கள் பரம கருணையுடன், பரம பொறுமையுடன் அந்த தர்ம விக்ரஹமான சரீரத்தால் எங்கணும் நிலவி வரும் அதர்மக் கலி கோலாஹலத்தைத் தாங்கிவிட்டுச் சரீரத்தை உதிர்த்திருக்கிறார்கள். மக்கள் யாவரும் தர்ம வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதே நீண்ட நெடு ஆண்டுகள் அல்லும் பகலும் அனவரதமும் சிந்தனையாக, சொல்லாக, செயலாக, பிரார்த்தனையாக, அனுக்ரஹமாக இப்படி வாழ்ந்த அப் பரம ஸ்ரேஷ்டமான அவதாரத்தால் பெறக்கூடிய பயனை வேண்டுமென்றே தவற விட்டுவிட்டவர்தான் நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள். ‘அவரைப் போற்றிப் பெருமை பேசிவிட்டால் போதும்; அவர் தம்மைப் போற்றிப் பெருமை படுமாறு ஏதுமே செய்யாமல் நம் வழியிலேயே போகலாம்’ என்றுதான் இருந்திருக்கிறோம். அப்படியும் நம்மைத் தூற்றாமல், சபிக்காமல், தன்னையும் நொந்து கொள்ளாமல், கீதோபதேசத்தின் சிகர உதாரணப்படி வெற்றி தோல்வி கருதாமல் அவதார ஸ்வதர்மமான தர்மப் புனருத்தாரணத்திற்கே முழு மூச்சுடன் பாடுபட்டுவிட்டு, பாடும் தெரியாமல் புஷ்பம் போல் ஆனந்த மலர்ச்சியுடனேயே தாமும் இருந்து உலகுக்கும் ஆனந்தத்தையே அள்ளி அள்ளி அருளிவிட்டே பூர்ணாயுள் முடியும் தருணத்தில் சரீரத்தை உதிர்த்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவரை நினைத்து துக்கிப்பதை விட, நம்மை நினைத்தே துக்கித்து ஆத்ம சோதனை செய்து கொண்டால் நலனும் பயனுமாக இருக்கும். அவ்வாறு செய்தால் பரிவே உருவான அப் பரம மூர்த்தியின் அருட்சக்தி நம் துக்கத்தைத் துடைத்து நம்மைத் தூயோராகத் தூக்கிவிடும்.

ஒரு பரம ஸ்ரேஷ்ட அவதார சரீரத்தை நடமாடும் தெய்வமாக நூறாண்டு உலவ விட்டும், மறுபுறம் அவதாரப்பணி என்று விசேஷமாக வேதமார்க்க மறுமலர்ச்சி நிகழவொண்ணாமல் கலிப்பிரவாஹத்தைப் பெருகவிட்டும் விளையாடிய அந்தக் கருணை—மாயைக் கலவையான பராசக்தியின் சித்தம் என்னவோ? வேதம் அடியோடு அடித்துப் போகப்படாமல் ஓரளவேனும் அணை போட்டும், ஆத்ம தீபம் அணைந்தே போகாமல் பொறியளவேனும் நிற்கவும் அவதாரம் நிச்சயமாக உதவியுள்ளது அன்றோ? அவ்வளவே அவள் திட்டமிட்டது போலும் !

ஸ்ரீசரணர்கள் 1957 ஸெப்டெம்பர் பிற்பகுதியிலிருந்து 1959 மார்ச் முற்பகுதி வரை, சுமார் ஒன்றரை ஆண்டுகள் சென்னையில் தங்கிவிட்டுப் புறப்படும்போது அளித்த பிரிவுபசாரக் கூட்டத்தில் பேசிய பலரும், மேலே கூறியுள்ள அதே ஆத்ம சோதனையைத்தான் பிரஸ்தாவித்து, ‘இனிமேலாவது நாம் பெரியவா உபதேசப்படி நடக்க வேண்டும்’ என்றனர்.

முடிவாக, முடிமணியாகத் தமது அமுதக் கருணையையே உருக்கி வாக்குகளாக வர்ஷித்த அவதாரர், “நான் உங்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நித்யமும் சொல்லியும் செய்ய முடியாதவர்கள் நான் போன பிறகு அப்படிச் செய்யணும் என்றால் எப்படி ?” என்று கேட்டுவிட்டு, இக்காலத்தில் மக்களை சாஸ்திரீய வாழ்க்கை முறையிலிருந்து இழுக்கும் பலவிதமான போக்குகளுக்கு எதிர்நீச்சுப் போடுவதில் உள்ள சிரமத்தை மனமார்ந்த அநுதாபத்தோடு எடுத்துக் கூறினார்கள். தொடர்ந்து பிரேமோபஷினத மந்திரங்களாகத் திருவாய் மலர்ந்தார், “நான் சொல்லி, நீங்கள் செய்யவில்லை என்றால் அது உங்கள் தப்பில்லை. உங்களை செய்யப் பண்ணும் சக்தி என் சொல்லுக்கு இல்லை என்றே அதற்கு அர்த்தம். அதாவது, என் தபஸ் போதவில்லை என்றே அர்த்தம். நான்—நீங்கள் வேறே வேறே இல்லை; ஒன்றேதான். நீங்களெல்லாம் என் அங்கங்கள்தான். அதனால் இப்போது நீங்கள் குறையே பட்டுக் கொள்ள வேண்டாம். ‘அப்படிப் பண்ணலியே, இப்படிப் பண்ணலியே’ என்று வருத்தப்பட வேண்டாம். நான்தான் என்னை ஸரிப்பண்ணிக் கொள்ள வேண்டும். அப்போது நீங்களெல்லாமும் ‘ஆடோமடிக்’காக ஸரியாகி விடுவீர்கள்.”

ஸரிக்கு நூறு சதவீதத்திற்கு மேலும் ஸரியான பரிபூர்ண புருஷர் அன்பின் முழுமையில் கூறிய வாசகமே அன்றி, அதல்ல யதார்த்தம் ! சேயின் நோயைத் தாயாய்த் தாங்கிய பாங்கில் பகர்ந்த வாசகமே அது !

“நான் உங்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நித்யமும் சொல்லியும் செய்ய முடியாதவர்கள் நான் போன பிறகு…….” என்று அன்று அவர்கள் கூறியதுதான் இன்று நினைவில் தைக்கிறது.

அவநம்பிக்கை சித்தாந்தத்தில் இக் கட்டுரையை முடிக்க வேண்டாம். “நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு”. அந்த அடைக்கல சரணத்தையும் அபய ஹஸ்தத்தையும் நம்பினால், “ஜயமுண்டு பயமில்லை”.

_______________________________________________________________________________________________________________________________

Believers are not let down—this is the verdict of the four vedas.

Both the words ‘Saranam’ and ‘Hastam’ mean ‘Support’. That which supports (bears) is called ‘Support’. The Divine body which supported countless devotees by giving asylum with its ‘Sarana Kamalam’ and protection (refuge) with its ‘Hasta Kamalam’ , is no more.

But, did the body and its limbs lend the compassion which supported the devotees? A physical body can only support physical matters. But how can a physical body support the burden of life and soul of a devotee? What supported them was the (principle of) compassion of ParAsakthi. It is something that exists everywhere and forever, immortal and spreads far and wide. But, because ordinary humans cannot absorb this subtle power, mortal bodies of ‘AvathAra PurushAs’ (incarnations of Divine powers) are shown to them, and through them ParAsakthi showers Her power of support on the humans. But in Her inscrutable play acts, the mortal body’s lifetime is fixed already and at the end of it, the life is ended, including the mortal body of ‘AvathArs’. But during this time, from the greatness of the various acts of support enacted by the occupier of the body, devotees will be able to realize the abundant power, which cannot be contained in that body.

Therefore, though the sorrow overwhelms us when the mortal body falls and thus brings to an end its various play acts, which have been witnessed by us through our eyes and ears, and have brought bliss to our soul, if we pray and view things with a clear mind, we will be able to realize that it was not the body which bore our burden, and the power of protection and support is still around us and into us, and it will ever remain there. This revelation is not mere words or imagination but the very truth.

From the Vedic saying ‘JeevEma Saradha: Sadham’ to the general saying ‘SadhAyus’ uttered when a child sneezes, they reveal that the maximum life time of a body is only one hundred years. ‘Noorudhal’ (Tamil) means ‘destroy’.

Sree Saranarkal, has borne the unethical, unrighteous, uncharitable effects of Kali’s all pervading evil play acts with His Golden statue of a body with abundant compassion, and patience and then shed it. Majority of us have missed out on receiving the fruits of the excellent AvathAr who, with His thoughts, words, deeds, prayers and blessings, lived with the sole objective that all the humans should return to the Dharmic way of life. We thought that it was enough if we eulogize Him, talk high of Him, but failed to do anything which He would have been proud of, and went our own way. In spite of all this, He never abused us, or cursed us, nor did He have any feeling of self apathy. Following BagavAn’s GeethOpadEsam, He did not mind about the success or defeat of His efforts, but toiled hard, for the reconstruction of Dharma, without being aware of the toil; lived with the happy blossoming smile of a flower, showered that happiness to the world, and shed His life when the end came.

Instead of mourning His disappearance, if we perform ‘AtmasOdhanai’ (analyzing our soul), it will benefit us. If we do that, His all compassionate power will wipe away our sorrow and lift us up as a pure soul.

What is the purpose ParAsakthi, a mixture of compassion and Maya, had in letting, on one side, the great Divine AvathAr walk the earth as a ‘Pratyaksha Dheyvam’ (God who can be seen with naked eyes) for hundred years, and on the other side, allowing the flooding of Kali’s evil acts, thus preventing the objective of the AvatAr, viz. reconstruction of the DhArmic way of life, from happening? But the AvatAr has certainly helped a bit, in preventing the VEdAs from being totally wiped out and the ‘Atma JyOthi from being extinguished completely, leaving at least a spark still glowing, is it not? She has probably planned only that much !

Many people who spoke at the farewell function, when Periava was leaving Chennai after having spent almost a year and a half between September 1957 and March 1959, mentioned about the ‘Atma SOdhanai’, and said that ‘ at least from now on, we should live as per Periava’s advise’.

At the end of His ‘UpanyAsam’, filled with words of nectar like compassion, Sree Saranar said, “If you cannot do what I tell you, while I am sitting amongst you, how is it possible when I leave?”, and talked sympathetically about the difficulty in fighting the various distractions which drag the people away from the life style as prescribed by SAstrAs. Then continued with these ‘Upanishada MantrAs’—like words, “ If you do not follow my advise, and do as I tell you, it is NOT your fault; It means that my word is not powerful enough to make you do as I tell you. That means, my penance is lacking. Me and you are not two different things. Both are same; All of you are parts of me. Therefore, you need not feel bad about it. Do not regret that you are unable to do things ‘this way’ and ‘that way’. I HAVE TO CORRECT MYSELF. THEN ALL OF YOU WILL BECOME ALRIGHT AUTOMATICALLY.”

These are words that were uttered out of entirety of pure love and compassion by the great soul who is right more than one hundred percent, but it is not the truth.

The words, “If you cannot do what I tell you, while I am sitting amongst you, how is it possible when I leave?”, are pricking us all at the depth of our hearts with a deep meaning.

Let us not conclude this article with distrust. “BELIEVERS ARE NOT LET DOWN; A VERDICT OF THE FOUR VEDAS”. If we trust in those ‘Sarana Kamalam’ and ‘Hasta Kamalam’, there is only VICTORY and no fear!”

இதை பகிர:

எங்களை தொடர்பு கொள்ளவும்