Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Ra. Ganapathi Anna’s experiences with Sri Periyava continues as part of Deivathin Kural Preface 1
Thanks to Shri. B. Narayanan Mama for the translation and excellent drawing. Rama Rama
ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா.
(ஸ்ரீ ரா.கணபதி தெய்வத்தின் குரல் முதற்பகுதிக்கு 1976-ஆம் ஆண்டு எழுதிய முகவுரையிலிருந்து).
அனுக்கிரஹம் செய்வதில் பரம உன்னதமாக இருப்பவரே, உபந்நியாசம் செய்யும்போது, உரையாடும்போது பரம எளியவராகிவிட, அந்த எளிமையில் ‘தனித்துவம்’ என்பதே இல்லாமல் ஆகி விடுவதால், ‘தனியொரு தத்துவமே’, சத்தியமே அவர் மூலம் பேசிவிடுகிறது.
அவர் ஏன் இப்படி நம்மோடு சேர்ந்து எளியராகி நிற்கிறார்? ஸத்தியமே அவர்களது லக்ஷியம் என்று சொல்லிவிட்டு, அவர்களே தமது பரமேஸ்வரத்துவத்தை மறைத்துப் பரம எளியர்போல் பொய்யாக நடிக்கிறார் என்றால் புரியவில்லையே! இதற்கும் இவ்வாக்கிலேயே விடை இருக்கிறது. ஆதிசங்கரர் அம்பிகையைத் துதிக்கும்போது தம்மைக் கடையரில் கடையராகச் சொல்லிக்கொண்டு, “என்னையும் கூடக் கடாக்ஷியம்மா”, “எனக்கும்கூட உன் திருவடியைத் தருவாய் தாயே!” என்றெல்லாம் வினய வடிவாக வேண்டுவதைச் சொல்லும் பெரியவாள், நாம் எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே, பரமேஸ்வராவதாரமான பகவத்பாத சங்கரர் நம்மில் ஒருவராகத தம்மை வைத்துக் கொள்கிறார் என்று விளக்குகிறார். விளக்கம் தருபவரின் எளிமைக்கும் இதுவே விளக்கு. அவதார புருஷர்களும் எப்படி சாமானிய மானுடர்களோடு சேர்ந்து நிற்கிறார்கள், எதற்காக அப்படி நிற்கிறார்கள் என்பதெற்கெல்லாம் நூலின் உள்ளே (பக். 652-3,887-8 ஆகியவற்றில்) விரியும் விளக்கம் இப்படி விளக்குபவரையும் விளக்கி வைக்கிறது.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோற்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
என்ற தமிழ் மறைப்படி, இந்த எளிய சான்றோரின் திருவாய் வழியே சத்திய தீபமே சுடர் வீசுகிறது; அதாவது, தெய்வத்தின் குரலையே கேட்கிறோம்.
________________________________________________________________________________________________________________________________
The ONE who is so eminent in His blessings, becomes a humble ONE while speaking or delivering Upanyasams; in that simplicity, there is no individuality, and therefore, an unique doctrine or ‘Satyam’ only speaks through HIM.
Why does He become a simple soul and stand with us? Having said that ‘Satyam’ (Truth) is His sole objective, He, then, hides His ‘ParamEswarathvam’ ( Divine traits) and disguises Himself as a simple soul and acts before us—this is not discernable ! The answer to this lies in His own words. Adhisnkarar, while praying to AmbAl, submits Himself as the lowest of the lowly souls, and says with utmost humility, “Protect me too, Oh Mother! Place your Divine feet on my head too!”—-While quoting this, MahaPeriava, further explains that Adhisankarar considers Himself as an equal amongst us in order to teach us how to pray. This, then is the proof for the humility of the ‘Light’ that lights up this principle.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோற்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(All lamps of nature are not lamps. The lamp of truth is the lamp of the wise.).
In accordance with the above Thirukkural ( the Tamil Veda), the light of truth glows through the words of this humble but great soul. Which means that we are hearing ‘Dheyvathin Kural’ (The voice of God).
To be continued……