Jaya Jaya Sankara Hara Hara Sankara – It is always delightful to read Shri Ra. Ganapathi Anna’s writing, makes one feel we are very close to Periyava. Here we go with another series again that will be published frequently on Anna’s experiences directly with Maha Periyava.
Thanks to Shri. B. Narayanan Mama for the compilation, translation and drawing. Rama Rama
ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா
ஒரு உண்மையான பக்தனுடைய லக்ஷணம் என்ன? அந்த இறைவனின் நினைவு அல்லாது வேறு நினைவின்றி, அவனையே ஸ்மரித்துக் கொண்டும், அவன் நாமத்தையே சொல்லிக் கொண்டும், அவன் லீலைகளையும், கல்யாண குண விசேஷங்களையும் பாடிக் கொண்டும் அவன் பாதகமலங்களில் சரணடைந்து இருப்பவனே ஒரு உண்மையான பக்தன். அந்த பக்தனுடைய இந்த இரண்டறக் கலந்த நிலையில், அவனுடைய உள்ள ஆழத்தில் இருந்து வெளிப்படும் உணர்ச்சிப் பிழம்புகள், கவிதைகள் உருவத்திலும், பாசுரங்கள் மற்றும், எழுத்துக்கள் உருவத்திலும் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகின்றன. நால்வரின் தேவாரத் திருவாசகப் பாடல்களும், ஆழ்வார்களின் பாசுரங்களும், ஸ்ரீ ஆண்டாளின் பக்திப் பரவசமான பாடல்களும், இதற்குச் சில உதாரணங்கள்.
இந்தப் பாடல்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் அவர்கள் மட்டும் உருகி நின்றதோடல்லாமல், அதைப் படிக்கும், பாடும் எல்லோருடைய மனத்தையும் உருக்கி அவர்களை பக்திப் பரவசத்தில் மூழ்கடிக்கின்றனர்.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவர்தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!”
இந்தப் பாசுரத்தைப் படிக்குந்தோறும், பாடுந்தோறும் நம்முடைய நெஞ்சங்களும் கசிந்து, உருகி, கண்ணீர் மல்கி அந்த இறைவனுடன் கலந்துவிடும் அநுபவம் கிடைக்கின்றது.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாசுரத்தைப் படிக்கும்போதும், நம் மனம் அந்த இறைவனின் திருவடிகளை நாடிச் செல்கின்றன. இதுபோல ஆயிரக்கணக்கான உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ராமபக்தி அவர் பாடிய ஆயிரக்கணக்கான கீர்த்தனைகள் மூலம் வெளிப்பட்டன. அதேபோல் புரந்தரதாசர், முத்துஸ்வாமிதீக்ஷிதர், சதாசிவ ப்ரம்மேந்திரர், ஷ்யாமா சாஸ்த்ரிகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இந்த மஹான்கள் அனைவருமே இறைவனை நேரில் கண்டவர்கள் என்று இவர்களுடைய வரலாறுகள் சொல்கின்றன. இது உண்மையா இல்லையா என்ற விவாதத்திற்கு நாம் செல்லப் போவதில்லை. ஆனால் இதில் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தாத்பரியம் ஒன்று உள்ளது. தங்களுடைய ஒருமுகப்பட்ட பக்தியாலும், அவன் நாமம் ஒன்றைத் தவிர வேறொரு உச்சாரணம் இல்லை, அவன் நினைவின்றி வேறொரு எண்ணம் என்பது இல்லை என்று சதா சர்வ காலமும் இறைவனின் பாத கமலங்களையே பிடித்துக் கொண்டு வாழ்ந்த அவர்கள் உள்ளத்தில் இறைவன் நிரந்தரமாகக் குடிகொண்டான், அவனோடு இவர்கள் இரண்டறக் கலந்துவிட்டனர் என்பதைத்தான் இப்படிச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமே. இரண்டிற்கும் இடையே பேதம் ஒன்றும் இல்லையே!
சமீபத்தில் வாழ்ந்த சிலரும் இப்படிப்பட்ட நற்பணியை செய்து சென்றார்கள் என்பதும் வரலாறு. அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ரா.கணபதி அவர்களும் ஒருவர். அவர் தொகுத்துத் தந்த ‘தெய்வத்தின் குரல்’ வேத சாஸ்த்ரங்களின் சாரமே என்பதில் இரண்டாவது அபிப்பிராயம் இல்லை. வேதங்களையும், சாஸ்திரங்களையும் படிக்காதவர்கள் இந்த ஏழு தொகுதிகளைப் படித்தால் வேதசாஸ்திரங்களின் சாரத்தைப் படித்ததற்கு இணையானது என்பது அனைவரின் ஒருமித்த அபிப்பிராயம். மேலும் அவர் மஹா பெரியவருடனுமான தன் சொந்த அனுபவங்களையும் பல புத்தகங்கள் மூலமாக எழுதியுள்ளார். பெரியவாளின் மீது அவருக்கிருந்த அளவிலா பக்தியின் வெளிப்பாடே இவைகள். தியாகராஜ ஸ்வாமிகளின் ராமபக்தி எப்படிக் கீர்த்தனைகளாக வெளிப்பட்டனவோ அதுபோலவே, கணபதி அண்ணாவின் பெரியவா பக்தியும் அவருடைய எழுத்தின் மூலமாக வெளிப்பட்டது என்றால் மிகையாகாது. அவர் பெரியவாளைப்பற்றி எழுதியவைகளைப் படிக்கும் போது, நாமும் நெக்குருகி, கண்ணீர் மல்க பெரியவாளுடன் இரண்டறக்கலக்கும் அனுபவத்தைப் பெறுகிறோம்.
பெரும்பாலோர் ஒரு புதிய புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கும்பொழுது, அதில் ஆசிரியர் எழுதியுள்ள முன்னுரையைப் படிப்பது அபூர்வம். “அந்தப் புத்தகம் எழுதியதின் நோக்கம், எழுத நேர்ந்த சந்தர்ப்பம், எழுத உதவியவர்களுக்கு நன்றி என்ற விவரங்களை அதில் ஆசிரியர் கூறியிருப்பார்.
ஆனால் ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின் முன்னுரையைப் படித்தால் சற்று மாறுபட்டதாக இருக்கும். பெரியவாளைப் பற்றிய, அவருடைய கல்யாணகுண விசேஷங்களைப் பற்றிய ஒரு நெக்குருகும் வர்ணனையாகவே அது இருக்கும். இந்த முன்னுரையையும் தன் பெரியவா பக்தியின் வெளிப்பாடாகவே ஸ்ரீ கணபதி அவர்கள் எழுதியிருப்பார். இந்த முன்னுரையைப் படித்தாலே நம் நெஞ்சங்கள் உருகிக் கரையும்; கண்களில் நீர் பெருக்கெடுத்தோடும்; உணர்ச்சிப்பெருக்கு மடை திறந்த வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடும்.
கணபதி அண்ணா எழுதிய இந்த முன்னுரைகள் சிலவற்றிலிருந்து சில பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி தொடங்குகிறேன்.
மஹாபெரியவா திருவடிகள் சரணம்.
______________________________________________________________________________________________________________________________
Maha Periyava As Seen by Sri Ra. Ganapathi Anna
What are the qualities of a true Baktha (devotee)? A true Baktha is one whose thoughts never leave the Almighty; one who is always thinking about Him; one who is always chanting His Nama; one who is always singing about His traits and Divine qualities; and one who has surrendered himself at His holy feet. In this state of ‘oneness with the God’, the devotee’s emotions and thoughts pour out from the depth of his heart in the forms of songs, essays and speech like the water that flows out when the floodgates are opened. The twelve Thirumurai’s sung by the famous four Saivite Nayanmars on Lord Shiva, the poetic works of Vaishnava Azhvars on Lord Vishnu, Thiruppavai and other Tamil poetry sung by Sree Andal on Sri Krishna are some examples of the emotional outpourings of True Bakthas. These devotional works, when sung by us, take us also to the ecstatic level of devotion, where our hearts melt, our eyes are filled with tears and we can also reach that state of oneness with the Almighty.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவர்தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!”—-திருஞான சம்பந்தர்.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே—திருநாவுக்கரசர்.
When we sing these songs or even listen to them, our hearts will simply melt and merge with the Almighty. We are taken to a totally different level. Thousands of such examples can be quoted.
The level of devotion sri Thyagaraja Swamikal had towards Sri Rama can be seen in the thousands of songs sung by him on Lord Rama. Then there were Purandaradasar, Muthuswamy Dheekshitar, Sadhasiva Bramhendirar, Shyama Sastrikal and many many more true Devotees, who sang in ecstasy on merging with The Almighty with their true Bakthi.
The life histories of all these great souls mention that they had the Darsan of their Deities. While we are not going to discuss the truth or otherwise of it, we have to realize the ‘ThAtparyam’ (intent ), behind that statement. Through their true devotion and unflinching love towards the Lord, all these great souls merged themselves with the Lord ( or to put it in better perspective, the Lord took all of them into His fold). Is it not same as or better than having Darsan of the Lord?
In recent times also there lived some great souls who were true Bakthas. One among them was Sri Ra.Ganapathy. ‘Deyvathin Kural’, a seven—volume collection of Sri MahaPeriava’s Upanyasams, speeches etc. is the outcome of the true devotion he had towards MahaPeriava. On his own confession, he hated Sanyasins before he had first met HIM. Even on his first visit to His camp with his parents, he did not want to go—-“why should I see this saffron robed ‘Samiyar’? Why should I remove my shirt? Why should I do ‘SAshtAnka NamaskAram to this man?” —–He did all this with the utmost reluctance and contempt. But when Periava’s sight did not leave him even for a second till he left the place, everything somersaulted. He could not forget that sight after that; it did not allow him to sleep—“My God! What is happening to me? I feel attracted towards Him; my thoughts never leave him.”—. What became of him from then on, is history.
Mere words cannot describe the deep devotion he had towards MahaPeriava. Let us read some of his writings to really understand that phenomenon.
‘Deyvathin Kural is the essence of VEdAs Upanishads and SastrAs. There is no second opinion on this. Those who have not read Vedas and Upanishads will understand their essence by reading these seven volumes.
Besides Deyvathin Kural, he has also penned many books on his own experiences and interactions with MahaPeriava. Just like Thyagaraja Swamikal’s ‘Keerthanas’ were the result of his true love and devotion for Sri Rama, Ganapathy anna’s writings are the result of his surrender at the lotus feet of MahaPeriava. When we read them, our hearts melt, tears flood our eyes, and we merge with Him and attain that state of oneness with Him.
Most of us who start reading a new book, will normally skip reading the foreword written by the author. The author, in most cases would have explained there, how he came to write the book, what was the subject matter, what were his references etc.
But when we read the foreword written by Ganapathy anna for ‘Deyvathin Kural’, we come across a totally different approach. The foreword will be a detailed description of MahaPeriava, of His traits and qualities, of His compassion towards humanity and other living beings, which will melt our body and soul and take us to a different level of Bakthi.
Let us browse through some portions of these forewords.
MahaPeriava Thiruvadikal Saranam.