Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 3-Part 2

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In the last chapter, one of our blog devotees observed that bondage affects even great Mahans like Sri Periyava when they are born as humans. However is that correct? Sri Ra Ganapathy Anna, explains beautifully in this chapter and the reason behind Periyava’s tears.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.

ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—series 3—chapter 2.

அண்ணன் — தம்பி என்ற சொந்தப் பாசத்தில் உண்டாகும் பிரிவுத் துயர் நம் துறவரசருக்கு ஏற்படவில்லை. ஆனால் ஆணவமிக்க இவ்வுலகில் ஓர் அண்ணன் ஒரு தம்பிக்குச் சிறு தவறு செய்ததற்குப் பெரிதே கழிவிரக்கம் கொண்டு பகவத் பிரார்த்தனா ரூபத்தில் ரஹஸ்ய கௌரவத்துடன் மன்னிப்புக் கேட்ட உத்தம மானுடப் பண்புதான் அவரை உருக்கித் திரு நயனங்களை மல்க வைத்திருக்கிறது!.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

என்ற குறளுக்கு இலக்கியமாக, ஸ்தானத்தில் கீழ்ப்பட்ட தம்பியிடம் மூத்தவர் காட்டிய சான்றாண்மையே ஸ்ரீசரணர்களின் திருவுளத்தை ஆழத் தொட்டிருக்கிறது.

மஹான்களும் ஆன்மிய, தெய்விகப் பேரநுபவங்களில் மட்டுமின்றி உன்னதமான மானுடப் பண்பை வியந்தும் விழிநீர் பெருக்கவதுண்டு. ரமண பகவான் வாழ்விலுங்கூட, ஆஸ்தானத்தில் கூடியிருந்த அனைவரும் காண, இப்படிச் சில நடந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:

தோழனாக இழைந்த சோழனிடம் பிணக்குற்ற கம்பன் சோணாட்டை விட்டே நீங்குகிறான். அப்போது அவன் தோழனிடம், “நீ என்னை ஆதரிக்காததால் நான் நிராதரவாகிவிட மாட்டேன். ஊருலகமெல்லாம் என்னைத் தாங்கித் தரிக்க இருக்கிறது. உன்னிலும் பேரரசனான சேரன் என்னை ஆதரிப்பது மட்டுமின்றி எனக்கு அடைப்பக்காரனாகக்கூடப் பணி புரிவானாக்கும்! அப்படி அவனை ஆக்கிக்கொண்டு வந்து உன் அரசவையிலேயே அவன் கையால் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டு காட்டுகிறேன், பார்!” என்று சூளுரைக்கிறான். பிற்பாடு அவ்வாறே சேரனைச் சேர்ந்து அவனைத் தன் கவித் திறனால் அடிமைகொண்டு, தனக்கு அடைப்பை ஏந்தவும் அவனை இணங்க வைக்கிறான். சோழன் அரசவைக்கே இருவரும் வரவும் செய்கின்றனர். சேரன் அடைப்பையிலிருந்து வெற்றிலை எடுத்து எடுத்துக் கம்பன் முன் பணிவுடன் நீட்டுகிறான். வெற்றிச் சிகரத்தைப் பிடிக்கவிருக்கும் அத் தருணத்தில் கம்பனோ அவ் வெற்றிலைகளைத் தானும் பணிவு தோன்ற வாங்கிக் கொள்கிறானேயன்றி, வாயில் இட்டுக் கொள்ளவில்லை! காரணம் அடக்கப் பண்புதான். வெற்றிலையை வாயிலிட்டுக் கொண்டால், தான் மெய்யாலுமே சேரனின் ஆண்டையாக உரிமை பாராட்டியதாகி விடும் என்றுதான் தன்னுடைய சூளுரை நிறைவேற்றத்தைத் தானே தடுத்துக் கொள்கிறான்!

இந்த கட்டத்திற்கு வருகையில் கம்பனின் உயர் பண்பை உன்னி உணர்ந்து நன்றாகவே கண்ணீரைக் கொட்டியிருக்கிறார்.

தம் உள்—மையை உள்ளேயே அடைத்து அடக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசரணரின் கண்ணில் நீர் கட்டி நின்றதோடு சரி, சுதாரித்துக்கொண்டு விட்டார்.

கண்ணீர் வழிந்து கீழே விழுந்து விடாமல் முகத்தை நிமிர்த்திக் கொண்டு, “தேன், தேன்” என்று கேட்டார்.

சடுதியில் தேன் வந்தது.

கண்களில் தேன் துளிகளை இட்டுக் கொண்டார். கடத்திலிருந்து கரத்தில் நீர் சரித்துக்கொண்டு கண்களைக் கழுவிக் கொண்டார்.

‘சட்னு’ தமையனார் நினைவையும் கழுவிவிட்டு வேறெதோ விஷயத்திற்குப் போய்விட்டார்.

பிற்பாடு ஸ்ரீகாளஹஸ்தியில் பால காண்டம் பகர்கையில் இவ்வளவு உணர்ச்சிவசப் படாமல் இச் சம்பவத்தை வர்ணிக்கும்போது தமையனார் கூறியதில் மேலும் சில விவரம் தெரிவித்தார்.

“நான் சொல்ல வேண்டியதைப் பட்னு சொல்லிவிட்டாலும் அதனால அவர் அப்படியே மாறிப் போய்டுவார்னு நெனக்கலே. ஆனா என்ன ஆச்சுன்னா, அவர் ஒரேயடியாப் பச்சாத்தாபப்பட்டுண்டு மனஸை விட்டே சொல்லவும் சொல்லிவிட்டார். ‘நம்ம பெரியவாள்ளாம் அநுஷ்டாதாக்களா [வேத சாஸ்திரங்களை நன்கு அநுஷ்டிப்பவர்களாக] இருந்த ஒசத்திலே எல்லாம் போய் இந்த ஸந்தி ஒண்ணுதான் மிஞ்சியிருக்கு. இதையும் நஷ்டப்படுத்திண்டா இந்தாத்துல பொறந்ததுக்கு ரொம்பக் கொறைவுங்கிற எண்ணத்துலதான் கோவம் வந்துடுத்து. ஆனாலும் தீரப் பாக்காம, நிதானம் தப்பி வெச்சது [வைதது] தப்புதான். ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிடறேம்பா’ ன்னு சொல்லி, அப்படியே பூஜைக் கட்டுக்குப் போய்ப் பண்ணினார்” என்றார்.

‘நம்ம பெரியவாள்ளாம்’ என்றது அகத்தின் முன் தலைமுறைகளைச் சேர்ந்தோரைத்தான், “பூர்விகாள் நன்னாவே வேதாப்யாஸ, அநுஷ்டானங்களோட இருந்துண்டு மடத்துக்கே ஊழியம் பண்ணிண்டு இருந்திருக்கா. அப்பா நாள்லேதான் இங்க்லீஷ் படிப்பு, உத்யோகம்னு போனது. எங் காலத்துல வைதிக ஸொத்தா வந்திருந்தது ஸந்தி ஓண்ணுதான். அதை நெனைச்சுதான் அண்ணா சொன்னது” என்று ஸ்ரீசரணர் ஓரளவு விளக்கினார்.

இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால்; ஸ்ரீசரணரின் பூர்வாச்ரமக் கொள்ளுத் தாத்தா திருவிடைமருதூரில் ஸ்ரீகாஞ்சி மடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டு வைதிகமாக வாழ்ந்தவர். அவரது மூத்த புத்திரர், அதாவது ஸ்ரீசரணரின் பெரிய பாட்டனார், தந்தையாரின் மடப் பணிக்கும் வாழ்முறைக்கும் வாரிசாக ஆகி சாஸ்திரோக்தமான வாழ்வு நடத்தினார். அவரது தவப் புதல்வரோ ஸ்ரீகாஞ்சி மடத்தின் அறுபத்தைந்தாவது பீடாதிபதிகளாகவே பேருயர்வு பெற்று ‘இளையாத்தங்குடி பெரியவாள்’ ஆனார். கொள்ளுத் தாத்தாவின் இளைய புத்திரரான ஸ்ரீசரணரின் நேர்ப் பாட்டனார் நல்ல வேதப் புலமை பெற்றிருந்ததோடு ஸ்ரீமடத்திற்குப் பரமோத்தமப் பணி புரிந்தவர்; மகத்தான அகிலாண்டேச்வரி தாடங்கப் பிரதிஷ்டையில் நிர்வாகப் பொறுப்பாற்றியவர்; அரும்பாடு பட்டு ஸ்ரீமடத்திற்கு ஏராளமாக நிலபுலம் வாங்கிச் சேர்த்தவர். இப்படிப்பட்ட குடியில் ஸ்ரீசரணரின் பிதாதான் தொடக்கத்தில் வேதப் பயிற்சி பெற்றாலும் பிறகு நவீனப் படிப்பு முறைக்கு மாறியவர்; மடப் பணியில் புகாமல் முதலில் தனியார் பள்ளியிலும், பிறகு அரசினர் கல்வித் துறையிலும் தொழில் புரிந்தவர்.

ஏற்கனவே (ஓரளவேனும்) விஷயம் தெரிந்தவர்களையும், அத்தியந்தச் சீடர்களையும் தவிர எவரிடமும் ஸ்ரீ மஹா பெரியவாள் அறுபத்தைந்தாவது பீடாதிபராக இருந்தவர் தமது ஒன்றுவிட்ட பெரிய தகப்பனார் என்றோ, அவர் காலத்திலும் அவருக்கு முன் பட்டத்தின் காலத்திலும் ஸ்ரீமடத்தின் சரித்திரத்தில் பொன்னெழுத்தில் பொறிக்குமாறு ஸ்ரீகார்யம் பார்த்தவர் தமது பிதாமஹர் என்றோ சொல்லவே மாட்டார். அவர்களுடைய சரித நிகழ்ச்சிகளை வெகு ரஸமாக விரித்துச் சொல்வாராயினும் அவர்கள் தமது பூர்வாச்ரமப் பூர்விகர்கள் என்பதற்குச் சங்கேதங்கூடக் காட்டமாட்டார்!

ஸ்ரீசரணர் பட்டமேற்ற பின்னரே அவரது கடைசித் தம்பியார் பள்ளிப் பருவம் எய்தினார். அவரை நவீனப் படிப்பில் விடாமல் ஸ்ரீமடத்து சாஸ்திரிகளிடம் வேதாப்யாஸத்திற்கே சேர்த்தனர். அவர்தான் பிற்காலத்தில் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாச்ரமத்தில் அன்னாருக்கு வேதம் பயிற்றுவித்தது.

இளையாத்தகுடி விருத்தாந்தத்திற்குத் திரும்பலாம்.

மஹா பெரியவாள் தளும்பிய கண்ணில் தேன் இட்டுக் கொண்டதன் காரணம் புரியவில்லை. என்னதான் ஸெளலப்யத்துடன் அவர் பழகினாலும் அயனான சந்தர்ப்பங்களில் அவரிடம்.’ஏன் எப்படி?’ கேட்கவிடாமல் ஏதோ ஒன்று நாவைத் தடுத்துவிடும். அவரே தமது உள் மகிமையை மறைத்துக் காப்பதற்காக நம் நாவுக்குக் காவலிட்டு விடுவார் போலும்! இப்போதும் அப்படித்தான் நடந்தது.

புரை (காடராக்ட்) உள்படப் பலவிதக் கண் நோய்களுக்குத் தேன் சிகித்ஸை (ஹனி தெரபி) நல்லதென்று விளம்பரப்படுத்தபட்ட சமயம் அது. எனவே பெரியவாளின் கண்ணில் நீர் கோத்ததுகூட ஏதோ நேத்திரக் கோளாறாலேயே இருக்கக்கூடும் என்றும் மருந்தாகவே தேனிட்டுக் கொண்டது என்றும் நாங்கள் எண்ணுமளவுக்குச் செய்துவிட்டார்!

பிற்பாடு ஒரு சாஸ்திரக்ஞர் சொல்லித்தான் தெரிந்தது. ஓர் உண்மையான துறவியின் கண்ணீர் பூமியில் பட்டால் புவிக்கே கெடுதல் என்று! நோயில் வடியும் கண்ணீர் அல்ல. மானுடமான உத்தம உணர்ச்சியில் உண்டாகும் கண்ணீர். இதற்குப் பரிஹாரமாகவே தேன் இடுதலை விதித்திருக்கிறதாம்.

உணர்ச்சி விழுமியதொரு தருணத்திலும் விழிநீர் சிந்தி விடாமல் தேக்கிக்கொண்டு விதிப்படி பரிஹாரம் செய்து கொண்ட சாஸ்திராபிமானத்தை என்ன சொல்ல? அந்த ‘அபிமான உறவால்’ தான் முதலில் மாதுஸ்ரீ லலிதாம்பாளை ஸுவாஸினி பூஜையிலிருந்து விலக்கினார்; இப்போது முடிவில் தம் கண்ணுக்குத் தேன் இட்டுக் கொள்கிறார்.

ஒரு துறவி ‘மானுடமான’ உத்தம உணர்ச்சியால் பூமி படக் கண்ணீர் சிந்தக்கூடாது என்றதற்குக் காரணமுண்டு. தெய்விகமான பக்தி பரவசத்தில் அவன் பெருக்கும் கண்ணீரும், ஆச்ரிதர் துயரைத் தனதாகவே ஏற்றுத் துடைத்தெறியும் தெய்வக் கருணையில் அவன் பெருக்கும் கண்ணீரும் உலகுக்குக் கெடுதல் செய்யாது. நலமே கூட்டும்; புனிதமே சேர்க்கும். இவ்வினங்களில் நமது ஸ்ரீசரணர் கண்ணீர் பெருக்கிய நிகழ்ச்சிகளும் உண்டு. தாம் கண்ணீர் பெருக்குகிறோம் என்பதுங்கூட அப்போது அவருக்குத் தெரியாமல் பக்தி அல்லது கருணையிலேயே ஸமாதியுற்றிருப்பாராதலால் தேன் கேட்கவும் மாட்டார். அக் கண்ணீர் தேனல்லவா? தேனுக்கும் மேலான தேவாமுதம் அல்லவா?

இன்னும் வரும்……………….

___________________________________________________________________________________________________________________________

Kanchi Sage’s Tears and Anger (Part 2)

No feeling of sorrow or misery possessed Our Sage because of the relationship ; but what made Him break down and brought tears in His eyes was the upright character of His elder brother, who felt extremely bad for having wrongly reprimanded his younger brother and offering his apology in the form of a prayer to Bagavan, and that too in this world where one sees only arrogance everywhere.

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்—— திருக்குறள்.

The touch stone of perfection is to accept defeat even from the hands of one’s inferiors.

Great souls will get emotional and shed tears, not only on having Divine and spiritual experiences but also while admiring superior human behavior. Even in Sri Ramana Maharishi’s life, some similar incidents have taken place for the whole audience to witness. We will see one such incident for example:

Poet Kamban was on very friendly terms with the King of ChOza. Somehow, there came a divide between them and because of that, the poet left him for the land of ChErA king; he told the king, “I will not become an orphan just because you refuse to support me. All the world is ready to support and take care of me. The ChErA king, who is superior to you, will not only support and patronize me but will also act as my servant who will prepare pan and wait on me. I will make him one and bring him to your court and receive and eat the pan prepared and offered by him. This is a challenge.” He then went to the ChErA kingdom and befriended the king with the help of his poetic genius. The king became a slave to the poet and was ready to wait on him with pan. Both of them came to the court of the ChOlA king. The ChErA king took out the pan from the box and offered to Kamban. But Kamban at the threshold of fulfilling his challenge, while receiving it with all humility, did not put it in his mouth. The reason? What else other than humility? Because, if he put it in his mouth, then it will amount to Kamban having enslaved the ChErA king. He stopped himself at that point and prevented the ignominy to the latter.

At this point of the story, Ramanar had shed tears profusely, having realized the superior attribute on the part of Kamban.

Sree Saranar, who suppressed His emotions, did not allow the tears to fall, but controlled Himself.

He lifted His head up, so that the tears would not fall to the ground and asked for honey.

Honey was brought immediately. He applied a few drops of the honey in His eyes and washed them off.

No sooner did He wash His eyes than He washed off His thoughts of His elder brother and diverted to some other topic.

Later, when He was narrating His ‘BAla KAndam’ in Kalahasti, He did not get this much emotional while describing this incident but added some more details on what His brother said at that time.

“Although I said what I wanted to say without hesitation, I never expected that such a change would come about him. What happened was, he felt so penitent on himself that he opened his mind and said, ‘Our elders were all strict followers of Veda SAstrAs; from that high point, we have descended so much that the only virtue left with us now is performing this ‘Sandhi’. If we let go this also, it will be a disgrace to this family. When I thought of this, I got angry. But it was wrong on my part to have lost my poise and scolded you without properly looking at the reality. I will do Namaskaram to Bagavan.’ He immediately went to the Pooja room and prostrated before the Deities.”

Sree Saranar further explained, “When he said ‘our elders’, he meant our family’s ancestors. Our ancestors have been doing Veda PArAyanam and performing all ‘AnushtAnam’s regularly and have been serving Sree Matam also. In father’s time only they went into learning English and seeking jobs. What came to me in my time was only this virtue, viz. ‘Sandhi’. ‘Anna’ was referring to this only.”

To be more elaborate: Sree Saranar’s (Poorvasrama) great grandfather was serving as a representative of Sree Kanchi Matam in Thiruvidaimarudhur and lived a truly VEdic life. His eldest son (Sree Saranar’s grand father ) took over from his father and served SreeMatam and lived as guided by SAstrAs. His son became the 65th Peetathipathi and was known as ‘Ilayathankudi PeriavA. Sri Saranar’s father’s father was a Vedic scholar and served Sree Matam very well. He was the chief administrator in the ‘Akilandeswari ThAdanka Prathistai’. He got a lot of landed properties for Sree Matam. Sree Saranar’s father who was born in this hierarchy, went for English education, although he was given Vedic education initially. He did not serve Sree Matam, but worked in a private school and then in the government education department.

Sree Saranar has never told anybody other than His very close disciples, that the 65th Peetathipathi was His father’s elder cousin brother and that His grandfather was rendering excellent service as ‘Sree KAryam’ during that time and the previous Peetathipathi’s time. Though He would narrate their histories very elaborately, He would never even give a hint that they were His Poorvasrama ancestors!

After Sree Saranar ascended the Peetam only, His youngest brother was old enough to go to school. He was not put in the regular (modern !) school but was sent to Sree Matam SAstrikal for studying VEdam. He only taught VedAs to Jayendra Saraswathi Swamikal in his PoorvAsramam.

Let us return to Ilayathankudi incident.

We did not understand the reason for Periava applying honey in His moist eyes. Although we were at ease with Him, sometimes, something would stop us from asking Him some questions. May be He would block our tongue in order to hide His inner emotions ! Now also it happened like this.

It was being advertised at that time that honey therapy was good for cataract. Therefore He made us think that the reason for tears in His eyes was some problem with the eyes and that was why He applied honey !

Sometime later only, we understood from a ‘SAstragnar’ (one who knew SAstrAs), that it was bad for the world if tears from a true saint fell on the earth. Not the tears due to some sickness; but ears shed out of emotions due to upright human feelings. Applying honey in the eyes at that time is prescribed as an atonement.

What can we say about the highest regards He had for SAstrAs, when He applied honey in order to prevent the tears from falling down at the time when His emotions were overwhelming ! Due to that High Regards only, He removed Lalithambal from the Suvasini Pooja in the beginning ! Now in the end He applied honey to His eyes !

There is reason for the rule that a saint’s tears due to emotional human feelings should not fall to the earth. The tears He sheds out of Divine ecstasy or out of compassion towards His devotees for their sufferings, will do no harm to the world; it will bring only good and holiness. There were incidents when Sree Saranar poured out tears due the latter reasons. As He used to be in a state of ‘SamAdhi’, unaware of the swelling tears, He would not ask for honey even. Are not the tears themselves real honey? Nay, they are drops of Nectar superior to honey !

TO BE CONTINUED…………………..

இதை பகிர:

எங்களை தொடர்பு கொள்ளவும்