Jaya Jaya Sankara Hara Hara Sankara – No one under this sun can capture the words of Sri Periyava as Shri Ra. Ganapathy Anna does. No wonder Periyava chose (read blessed) him to compile Deivathin Kural. Here is an awesome article with many unknowns about Periyava’s childhood (Balyam) brought to the limelight. We also come to know of Periyavas favourite sport he played in school and more importantly never missing to do on-time Sandhyavandanam that too with madi.
Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.
ஸ்ரீரா.கணபதி கண்ட மஹாபெரியவா (series—3—chapter 1)
காஞ்சி மாமுனிவரின் கண்ணீரும் கோபமும்.
பகுதி ஒன்று.
1961:
ஸ்ரீ மஹா பெரியவர்கள் இளையாத்தங் குடியில் சாதுர்மாஸ்யம் அநுஷ்டித்துக் கொண்டிருந்த சமயம். அதனிடையில்தான் சென்னை திருவல்லிகேணியில் அவரது பூர்வாசிரமத் தமையனாராகிய கணபதி சாஸ்திரிகள் காலமானதாகச் செய்தி வந்தது.செய்தி கேட்டபோது ஸ்ரீசரணர்கள் எள்ளளவும் கலங்கவில்லை; மனமும் கலங்கவில்லை. கண்ணும் கலங்கவில்லை.உடனே அவர் சகஜமாக ஒரு சிஷ்யரிடம் சொன்னது. “லலிதாம்பாளை ஸுவாஸினி பூஜைக்கு ஒக்கார வேண்டாம்னு சொல்லு” என்பதுதான்!
ஆச்சர்யமாயிருந்தது! ஒரு புறம் ரத்த சம்பந்த உறவுக்கு அடியோடு துறவு!; இன்னொரு புறம் சிஷ்டாசார மரபு காக்கும் மடத் தலைமையில் அத்தியந்தமான உறவு! இந்த உறவால்தான், ஆசார வழக்குக் கெடலாகாது என்பதொன்றையே அந்த மரணச் செய்தி கேட்டபோதும் கருத்தில் கொண்டு, அந்த மாதரசியை ஸுவாஸினி பூஜையிலிருந்து விலக்கினார். லலிதாம்பாள் கணபதி சாஸ்திரிகளுக்கு (பூர்வாச்ரமத்தில் பெரியவாளுக்குமேதான்) உடன் பிறந்த ஸோதரி. ரத்த சம்பந்த உறவால் அந்த அம்மையாருக்கு அன்று தீட்டு உண்டல்லவா?
இந்த ஓர் உத்தரவை இட்டுவிட்டு, தாம் அதுவரை ஸம்பாஷித்துக் கொண்டிருந்த வேறெதோ விஷயத்தையே தொடர்ந்தார். அது குறித்துத் தமக்கே உரிய முறையில் ஸாவதானமாக ‘நோண்டி நோண்டி’க் கேட்டுக் கொண்டும் ( அவர் அப்படித்தான் வர்ணித்துக் கொள்வார்! ), தோண்டித் தோண்டித் தாமே மேன் மேலும் விவரங்களை அள்ளியெடுத்துச் சரித்துக் கொண்டும் இருந்தார். ஆச்சர்யமாகக்கூட இருந்தது, ’இப்படியும் ஒரு பாசமறுத்த வைராக்கியமா? தான் ஆடா விட்டாலும் சதை ஆடும் என்பதுங்கூடப் பொய்த்து விட்டதே!’ என்று!
அப் பேச்சினிடையே சதுர்த்தி பற்றிப் பிரஸ்தாவம் வந்தது. கணபதி சாஸ்திரி பிறந்ததோ, மறைந்ததோ சதுர்த்தி போலிருக்கிறது. சரியாக நினைவில்லை. ஆனாலும் சதுர்த்தியைத் தொடர்புறுத்தித்தான் ஸ்ரீசரணர்கள் தமையனார் விஷயமாகப் பேச்சைத் தொடங்கினார் என்று நினைவிருக்கிறது. கண்ணீர் வாடையே இன்றி சிரித்த முகமாகத்தான் சொல்லிப் போனார்:
“பேருக்கு ஏத்த மாதிரி சதுர்த்தி. ஆனா பேர் பிள்ளையார்—கணபதியை நெனச்சு வெச்சதில்லே. தாத்தாவுக்கு அந்தப் பேர்தான். தலச்சனானதால அந்தப் பேரையே இவருக்கு வெச்சது. குல தெய்வம் ஸ்வாமிமலை ஸ்வாமி. அதனால எடச்சனுக்கு அந்த ஸ்வாமி பேர் வெச்சது. [‘எடச்சன்’ என்று தம்மையேதான் குறிப்பிட்டுக் கொள்கிறார். ஸ்ரீ சரணரின் பூர்வாச்ரம நாமம் ஸ்வாமிநாதன் என்பது.] அண்ணா—தம்பிகளுக்கு பிள்ளையார்—ஸுப்ரம்மண்யர் பேரை வெச்ச மாதிரி அதுவே பொருத்தமா அமஞ்சுடுத்து!
“எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வயஸு வித்யாஸம். அவர் பொறந்து ரொம்ப வருஷம் கொழந்தை இல்லையே—ன்னு வேண்டிண்டெல்லாங்கூட இருந்திருக்கா. ஒரே பிள்ளை—ன்னா அவனுக்கு எப்ப என்ன ஆகுமோங்கறதால இன்னூணு இருக்கணும்னுவா. வசனமே சொல்றது, ‘ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல; ஒரு மரமும் தோப்பல்ல’ன்னு——–
“வயஸுல நன்னா மூத்தவர்னாலும் ஸமதையா நடத்துவார். கடலூர் மஞ்சக்குப்பத்துலே ஸெய்ன்ட் ஜோஸஃப் காலேஜ்ல படிச்சுண்டிருந்தார். இப்பவும் (1961-ல்) அது ஸ்கூலா நல்ல பேரோட நடந்துண்டிருக்கு. ஒரு ப்ராம்மண அம்மா கிட்ட சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தது. லீவுக்கு ஆத்துக்கு வரச்சே அந்த அம்மாளைப் பத்தி அண்ணா கதை கதையாச் சொல்லுவார். மஹா கோபக்காரியாம். மங்களம்–னு பேராம். ‘பொங்கும் மங்களம் எங்கும் தங்குக’ ன்னு அப்பவே நான் கேள்விப்பட்டிருந்தேன். இந்த மங்களம்மா, அண்ணாவுக்குப் பொங்கிப் போட்டுண்டிருந்தவ, கோபத்துல ரொம்பவும் பொங்கிண்டிருந்தாங்கறதை வெச்சு வேடிக்கை பேசறது. ’போறும் போறும், நீ அவகிட்ட தங்கியிருக்கறதே! இந்தப் பொங்கும் மங்களம் எங்கேயும் வேறே தங்க வேண்டாம்’னு தமாஷ் பண்றது……..”
ஸ்ரீ சரணர் இப்படி சிலேடை நகைச்சுவை செய்தபோது அவருக்குச் சுமார் பத்தே வயதுதான். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பாலகர் தமிழ் வசனத்தை வைத்து வார்த்தை விளையாடல் செய்தது முளையும் பயிரிலேயே அறிவுக் கூர்மையைக் காட்டுகிறதல்லவா?
“ஸமதையா நடத்தினது அப்ப. பிற்காலத்திலேயோ [தாம் பீடாதிபதியானதற்குப் பிற்காலத்தைக் குறிப்பிடுகிறார்] மடத்துக் கார்யம்னா ரொம்ப பவ்யமா, ச்ரத்தையாகவே பண்ணிண்டிருந்தார். முத்ராதிகாரி ஸ்கீம் ஆரம்பிச்சப்ப அஞ்சாறு வருஷம் தஞ்சாவூர் ஜில்லா, திருச்சினாப்பள்ளி ஜில்லா பூரா அதுக்காக நெறய்ய ஓடியாடி ஒழச்சார்.
“ஆதி நாள்ல ஒரே ஆத்து மனுஷாளா இருக்கச்சேகூட ஒரு ஸமயம் அப்படி இருந்திருக்கார்…”.
‘அப்படி’ என்றால்? வயதில் பெரியவாராயினும் தமையனார் தம்மிடம் மரியாதை காட்டியதைத்தான் ‘மரியாதை’ என்ற வார்த்தையைச் சொல்லாமல் பண்புச் சிகரமான ஸ்ரீசரணர் ‘அப்படி’ என்கிறார். தம்மிடம் பவ்யமாக, தம் அருளாணையில் ச்ரத்தை வைத்துத் தமையனார் பணி செய்ததையே ‘மடத்துக் காரிய’த்தில் அவர் அப்படி இருந்ததாக நயமுறச் சொல்லியிருக்கிறார்! ஸ்வய கார்யம் என்பதே அற்றுப்போன இந்த ஆதரிச மடாதிபதிக்குத் தொண்டு செய்ய மடத்துக் காரியந்தானே வழி?
“அப்ப அவர் வெளியூர்லேந்து ஆத்துக்கு வந்திருந்தார். ஸ்கூல் முடிஞ்சு நான் ஆத்துக்குத் திரும்பச்சே மணி ஏழுகூட ஆயிடறதுண்டு. ஏன்னா, வெளயாட்டு ஆசைதான்! அப்ப கிரிக்கெட், ஸ்கூல் பசங்களோட வெளயாட்டாகலே. கிட்டிப் புள்தான் உண்டு. இதை டெவலப் பண்ணித்தான் வெள்ளைக்காரா கிரிக்கெட் ஆக்கியிருக்கா. எனக்குக் கிட்டிப் புள்ளுல இன்ட்ரெஸ்ட் இல்லே. ஃபுட்—பால்ல கொஞ்சம் இஷ்டம். ரொம்ப இஷ்டம் பாட்மின்டன்தான். ஆக்ருதி போறாததால [தமது உருவம் சிறுத்து இருந்ததைக் குறிப்பிடுகிறார்] ஒதைச்சு, கிதைச்சு ஓடியாடி வெளையாடற ஃபுட்—பாலுக்கு த்ராணி போறல்லே. அதனால கால்பந்துக்குப் பதில் பூ மாதிரிக் கைப்பந்து வெளயாட்டுல போனது…..பாட்மின்டன்கூட நம்மூர்லேந்துதான் சீமைக்குப் போய் அந்தப் பேர் வாங்கித்துன்னுவா. தெரியுமோல்லியோ? [தமது வழக்கப்படி, உடனிருந்தவர்களில் எவருக்கு இவ் விஷயம் தெரியுமென்று தலை தலையாகக் கேட்கிறார் எவர்க்கும் தெரியவில்லை…..] ஸ்கூல் முடிஞ்சவிட்டு பாட்மின்டன் ஆடிட்டுத்தான் ஆத்துக்கு வரது. நேரம் போறது தெரியாம உத்ஸாஹம் இழுத்துண்டு போய்டும்.
“என்ன உத்ஸாஹமானாலும் ஸந்தியை [ஸந்தியாவந்தனத்தை] மறக்கறதில்லே. ப்ளே—க்ரெளன்ட் கிட்ட காவா [கால்வாய்] உண்டு. அஸ்தமிக்கறதுக்குள்ள அர்க்யம் குடுத்துடணும்னு பாதி வெளயாட்டுலயானாலும் நிறுத்திட்டுக் காவாக்குப் போறது. டீமா வெளயாடறாப்பலயே டீமாப் போய், கை கால் அலம்பிண்டு, நெத்திக்கு இட்டுண்டு ஸந்தி பண்றது. சில நாள்ல அப்பறங்கூட நெழல் வெளிச்சம் இருந்தா மறுபடி கொஞ்சம் ஆடறது. கண்ணைக் கூராக்கிண்டு பந்து தெரியற மட்டும் ஆடறது. ஆத்துக்கு வரச்சே நன்னாவே இருட்டிப் போயிருக்கும்.
“எனக்கு அப்பதான் உபநயனமான புதுசு. அதனாலே, வேறே அத்யயனம். அநுஷ்டானம் இல்லாட்டாலும் ஸந்தி ஒண்ணை மட்டும் கொஞ்சம் பிடிச்சுண்டது…..”
கொஞ்சம் என்பது அவருக்கே உரித்தான அடக்கத்தில் சொன்னதாகவே இருக்க வேண்டும்.
‘வேறே அத்யயனம், அநுஷ்டானம் இல்லாட்டாலும்’ என்றதையும் அப்படியே எடுத்துக் கொள்வதற்கில்லை. ஏனெனில் உபநயனமானவுடன் தமக்கு ஸம்ஸ்கிருதத்தில் பிரைவேட் டியூஷன் தொடங்கப்பட்டதாகவும், ‘வழக்கமாக பிரம்மசாரிகள் கற்றுக் கொள்கிறவைகளை‘த் தாம் கற்கலானதாகவும் பெரியவாளே தெரிவித்திருக்கிறார். இளங் காலையில் பழையது சாப்பிட்டுவிட்டு, அவசரக் குளியல் முடித்து அவ் வகுப்புக்குப் போய், அது முடிந்தபின் திரும்பி வீடு வந்து புத்துணவு கொண்டு [சிற்றுண்டியா, போஜனமா என்று நினைவில்லை; அல்லது சொல்லவில்லை] பள்ளிக்குச் சென்றதாகக் கூறியிருக்கிறார். எனவே ஸந்தி செய்தது மட்டுமின்றி, ‘வழக்கமாக பிரம்மசாரிகள் கற்கும்’ சில வேத ஸுக்தங்களும், ஸ்தோத்ரங்களும் அவர் பாராயணம் செய்தே வந்திருப்பார். ஆயினும் தம் குடும்பத்திற்குரிய ரிக் வேத ஸம்ஹிதையை ஆரம்பத்திலிருந்து விதிவத்தாக அத்யயனம் செய்யாமல் சில வேத ஸுக்தங்களே (அதுவும், தமிழகத்திலும் மிகப் பரவலாக வழங்கும் கிருஷ்ண யஜூர் வேதப்படி) கற்றதால் பெரியவாள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.
இங்கொரு ஆபூர்வமான விஷயம் சொல்லாமல் விடக்கூடாது. ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு குருவும், எட்டே நாள்கள் பீடாதிபதியாக இருந்தவருமான முன் பட்டம் அவருக்குப் பெரியம்மா புத்திரர்தான். லக்ஷ்மீகாந்தன் என்ற பத்துப் பன்னிரண்டு வயது பிரம்மசாரியாகச் சிதம்பரத்தில் அவர் ரிக்வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தபோது ஒரு காலகட்டத்தில் பெரியவாளின் தகப்பனார் சிதம்பரத்தில் பணி புரிந்து வந்ததால் அவர் இவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார். அப்போது அவர் வேத ரிக்குகள் பாடம் செய்வதை அவரைவிட நாலைந்து வயது சிறியவரான குழந்தை ஸ்வாமிநாதன் கேட்டே தனது அபார ஞாபக சக்தியால் அவற்றில் சிலவற்றைப் பாடம் பண்ணிவிட்டது! கம்பீர தோரணையுடன் குழந்தை பெருமை பெருமையாக அவற்றை ஓதத் தொடங்கியபோதே பாவம், வீட்டுப் பெரியவர்கள் அதை அடக்கி விட்டார்கள் – உபநயனமாகாத பிள்ளை வேதம் சொல்லலாகாது என்பதால்!
[ஆக, பிற்பாடு துரீயாச்ரமம் ஏற்றபோது ஸ்தூலமாக குருமுக உபதேசம் பெறாத ஸ்ரீசரணர் – வேதத்தை வாழ்விக்கவே, குரு—சிஷ்ய பரம்பராக் கிரமத்தை வலியுறுத்தவே வந்த சாஸ்திரக் காவலர் -– ஏதோ ஒரு விதத்திலாவது குருவிடமிருந்து வேதம் கற்றாதாக இருக்க வேண்டுமென்றே இப்படி ஒன்று நடந்தது போலும்!]
ஐந்தாண்டுகளுக்குப் பின் 1966 –ல் ஸ்ரீகாளஹஸ்தியில் முகாமிட்டிருந்தபோது தமது பாலகாண்டத்தில் பல விஷயங்களைத் தெளிவு செய்த மஹா பெரியவாள் இந்த ஸந்தியா ஸம்பவம் பற்றிக் கூறினார்; “ஆத்துல அடஞ்சுண்டு ஸந்தி பண்ணாம, ஆகாசம் பாக்க, தெறந்த வெளில பண்றதுல ஒரு ஸௌக்யம் இருக்குன்னு ஒண்ணு ரெண்டு க்ருஹஸ்தா காவாக் கரைக்கு வந்து பண்ணுவா. அவா கிட்ட விபூதி வாங்கி இட்டுக்கறது…..அநேகமா பூண போட்டாச்சுன்னா வேஷ்டி –- ‘சோமன்’ங்கிறது -– கட்டிண்டுதான் ஸ்கூலுக்குப் போறது. வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டோ, கீழ்ப்பாச்சு கட்டிண்டேதான் வெளயாடறது, மரத்துல ஏர்றது எல்லாங்கூட! கவர்னர், கலெக்டர் மாதிரி தொரெ ஊருக்கு வந்தா ஸ்கூல் பூரா பாக்கப் போறச்சே, ஸ்போர்ட்ஸுனே நடத்தறச்சே , D.E.O. மாதிரி எஜூகேஷன் டிபார்ட்மென்ட் அதிகாரிகள் ஸ்கூல்ல இன்பெக்ஷனுக்கு வரச்சே, இன்னும் சில நாள்ல மட்டும் நெஜார் போட்டுண்டு போறது. வேஷ்டியோ, நெஜாரோ எதுவானாலும் அதையும் சட்டையையும் ஸ்கூல் விழுப்புக் கூடாதுன்னு அவுத்து வெச்சுட்டு வெறும் கோமணத்தோடதான் ஸந்தி பண்றது…… மலயாளத்துல அப்படித்தான் ஆசாராமே. ப்ராம்மசாரிப் பசங்க வெறும் கௌபீனதாரிகளாகத்தான் அத்யயனம் பண்ணணும்னு. இப்பவும் அப்படிதான் நடந்துண்டு வரது. ஆசார்யாள்கூட அந்த மாதிரிதான் பண்ணியிருப்பாளா இருக்கும்….”
ஆதிசங்கர அவதாரர் ஏதோ தற்செயலாக நேர்ந்தது போல இப்படி ஸந்தி செய்ததில் அந்த மூல வருடனேயே அதிசயப் பொருத்தமா?
இளையாத்தங்குடிக்குத் திரும்பி, விட்ட இடத்திலிருந்து தெய்வத்தின் குரலைத் தொடர்வோம்:
“அண்ணா வந்திருக்கச்சேயும் நான் வெளிலேயே ஸந்தி முடிச்சுட்டு நன்னா இருட்டினவிட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தேன்.
“அவருக்கு மஹா கோவம் வந்துடுத்து. ‘பெரிய தொரெ! ஆடிப் பாடிண்டு இருட்டி ஏழு ஜாமத்துக்கு வரே! தண்டத்துக்கா ஒனக்கு உபநயனம் பண்ணினது? ஸந்தியை விட்டுட்டு அப்படி என்ன வெளயாட்டு? ஹா,ஹூ!”ன்னு அதம்பிண்டு ஏகமாப் பேசிப்பிட்டார்.
“பண்ணாத தப்பைச் சொல்றானேன்னு எனக்கு ரோஸம் தாங்கல. ஆத்துல ரொம்ப செல்லம். அப்பா—அம்மா அதுந்து ஒரு வார்த்தை சொன்னதில்லே. அதனால, பொத்துண்டு வந்துடுத்து. கண்ணைப் பொத்துண்டு ஜலம் கொட்ட ஆரம்பிச்சுடுத்து. ஆனா, என்னவோ, வாய்லேந்து வார்த்தையைக் கொட்டிடலே. [அந்த சிறு வயதில் சீறியிருக்க நியாமிருந்த சமயத்திலும் தாம் காட்டிய அடக்கப் பண்பையும் அடக்கிப் பேசிகிறார்!] ‘காலத்துல ஸந்தி பண்ணாம விடலாமா-ங்கிற நல்ல எண்ணத்திலதானே கோச்சுக்கறான்?”னு, பதிலுக்குக் கோச்சுக்காம இருந்தேன். ஆனாலும் ‘நம்ம மேல இல்லாத குத்தம் எடுக்கறானே’ன்னும் இருக்கத்தான் இருந்தது. அதையும் கொஞ்சம் அடக்கிண்டு நாலு வார்த்தைதான் கேட்டேன். ‘டயத்துக்கு ஸந்தி பண்ணனுன்னு எனக்கும் தெரியும். காவாயில பண்ணிட்டுதான் வரேன். நான் வரதுக்கு முந்தி, ’காலம் தப்பிப் போச்சே’ன்னு ஒனக்குக் கோவம் வந்தது ந்யாயந்தான். ஆனா வந்தவிட்டு ஆளைக் கூட ஸரியாப் பாக்காம நிதானம் தப்பிப் பேசினா எப்படி? நெத்தியை பாத்தாத் தெரியலே? ன்னேன்……”
ஆஹா! பால் வடியும் அந்தக் குமாரஸ்வாமியின் முகம் ரோஷத்தில் சிவப்பேற, அதன் பரந்த நெற்றியில் பளிச்சிட்ட திருநீற்றுக் கீற்றுகள் தமையனாருக்கு என்ன பெருமையை உணர்த்தினவோ? ஆனாலும், தாம் அப்படி ஏதும் உணர்த்துவித்ததாக நம்முடைய விநயவடிவர் ஜாடைமாடையாகக்கூடத் தெரிவிக்காமலே பேசிப் போனார்.
“இவ்வளவுதான் நான் சொன்னது, அண்ணா –- வயஸுல நன்னாவே மூத்தவர்; திட்ட, அடிக்க, எதுவும் பண்ண ரைட் இருக்கிறவர் –- என்னவோ பண்ணப்படாத மஹா தப்புப் பண்ணிட்ட மாதிரி சட்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டார்……..”
இதுவரை இன்முகத்துடன் உற்சாகமாகக் கதை கூறிவந்த மஹா பெரியவாளின் குரல் ‘சட்னு’ இங்கே தழதழத்துவிட்டது. தழதழப்பு உள்ளுறையத் தொடர்ந்தார்.
“இந்த நாளாட்டம் பெரியவா சின்னவா வித்யாஸமில்லாம எடுத்ததுக்கெல்லாம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ சொல்ற வழக்கம் அப்ப கெடயாது. ஃபீலிங் இருக்கணும்னே இல்லாம, ஒரு கர்ட்டிஸிக்காக இப்படிச் சொல்றதா இப்ப ஏற்பட்டிருக்கு. அண்ணாவுக்கு அத்தனை ஃபீலிங் இருந்தும் -– எத்தனைன்னு நேர்ல பாத்த எனக்குத்தான் தெரியும். இத்தனை வருஷங் கழிச்சு இப்பவும் மனஸுலே நிக்கற அளவுக்கு ஃபீலிங் இருந்தும் -– அந்த மாதிரி [‘மன்னிப்பு வாசகம்’ என்ற சொற்றொடரை நம் பண்புச் செல்வர் சொல்லவில்லை] எதுவும் சொல்லலே. சொல்லியிருந்தா அது அழகும் இல்லே. ஆனா அதுக்கு எத்தனையோ மேலே, என்ன சொன்னார்னா, ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிடறேம்பா’ ன்னு மனஸு கொழஞ்சு சொன்னார். சொல்லிட்டு அப்படியே பண்ணினார்…..”
இப்படி முடிக்கும்போது ஸ்ரீ மஹா பெரியவாளும் குழைந்தே விட்டார். அப்போதுதான் அவரது நாத் தழுதழுப்பு கண்ணில் பளபளக்கும் நீராகப் பரிணமித்தது.
இன்னும் வரும்…………………….
_____________________________________________________________________________________________________________________________
Kanchi Sage’s Tears and Anger.
Sree MahA PeriyavA was observing ChAturmAsyam at IlayAththAngudi. During that time only, news arrived that PeriavA’s (PoorvAsrama—-previous Janma) elder brother Sree Ganapathi SAstrikal passed away in ThiruvallikkEni, Chennai.
PeriavA was not perturbed in the least, on hearing the news. Neither the mind was disturbed nor the eyes showed any signs of emotion.
He immediately told one of His disciples, “Tell Lalithambal not to sit for the ‘SuvAsini Pooja.” That is all!
It was amazing ! On one side it was total renunciation of blood relationship; On the other side close relationship towards the leadership of the Mutt which protects the hierarchy of existing customs.
Because of the latter relationship only, He removed Lalithambal from the Suvasini Pooja, keeping in mind (even on receiving the news of death) that the existing customs should not be violated ! Lalithambal was none other than the sister of Ganapathi Sastrikal and also the PoorvAsirama sister of Periava! Because of the blood relationship between the elder brother and sister, the latter had to keep away from performing Poojas and other Divine activities.
After giving this instruction, Periava continued with His earlier conversation on some other topic. He was questioning others again and again in His own way, and also dug out a lot of details from His own mind and presented them. It was amazing to think whether there could be such total detachment ! There is a saying in Tamil which means, ‘Even if the person does not exhibit his emotions consciously, they will show up by the involuntary movements of some muscles’. Even that has been disproved here.
During that debate, mention was made about ‘Chaturti’. It was probably ‘Chaturti’ on which Ganapathi Sastrikal was either born or passed away, I do not remember. But I remember that Sree Saranal started the conversation about His brother centered around Chaturti. He was talking with a smiling face without any trace of tears in His eyes.
“Chaturti’ , in line with the name; name is Pillaiyar—He was not named after Ganapathi; it was grandfather’s name; because he was the eldest, he was given that name. Family deity was Swamimalai Swami. The second was given that name (He is talking about Himself! PeriavA’s name in His PoorvAsramam was Swaminathan). Elder brother and his younger brother were named ‘Pillaiyar and ( Subramanya) Swami and it fitted well!”
“The age difference between us was quite big (nine years). As there was no further child after him, (parents) had even prayed to God. If there was only one boy, parents will be worried what if something happens to him. There is a saying in Tamil, ‘A single son will not make a son, as a single tree will not make a grove’.”
Though he was much elder to me, he treated me as an equal. He was studying in St.Joseph college in Manjakkuppam in Cuddalore. Now also (1961) it is functioning well as a school. Food was arranged for him from a Brahmin woman. Whenever he came home for vacation, he used to tell us a lot of incidents involving that lady. She was a very short-tempered woman. Her name was Mangalam. I have heard of the saying, “May the effervescent prosperity spread everywhere” . (பொங்கும் மங்களம் எங்கும் தங்குக).
This lady Mangalam, who was cooking food for my elder brother, was also cooking him with her angry outbursts ! We used to tell him “(You) Staying there is more than enough; let not the effervescent ‘Mangalam’ go and stay anywhere else!” and make fun of him.”
When Sree Saranar was speaking like this using pun, He was hardly ten years old. When He was playing with Tamil words (like the above incident) when He was but a boy, it shows His sharpness of mind even at that young age.
“He treated me as his equal at that time; but later (He is referring to the time after He ascended the Kamakoti Peetam) He was serving Sree Matam with all humility and sincerity. When the ‘MudrAthikAri’ scheme was started, he toiled a lot for its implementation, touring all over Thanjavoor and Tiruchirapalli districts for five or six years.
( MudrAthikAri scheme was started by Sree Saranar, which brought people of all castes together, by combining service to God and service to people. The person in—charge of this scheme was called ‘MudrAthikAri’).
“In earlier days also he was ‘like that’, when we all lived in one house.”
What is this ‘like that’? Periava is referring to the respect shown to Him by elder brother, although he was many years elder to Him, as ‘like that’ instead of using the word ‘respect’, He being the epitome of flawless character. In mentioning about his service to the Sree Matam also, He used the same expression to mean the sincerity and application of mind His elder brother exhibited. Service to Sree Matam was the only way to do service to Him, who had renounced all His personal desires and needs.
“At that time he had come home from another place. ( This happened in Thindivanam in 1905 or 1906, when Sree Saranar was eleven or twelve years old )When I return from school, it would be almost seven in the evening; because of my appetite for games. Cricket had not become the sought after game in schools, then. It was ‘Kiiti Pul’ (tipcar). The westerners had developed this game only into cricket. I was not interested in playing tipcar. I liked to play football. But Badminton was the game which I liked the most. (Periyava used to make fun saying “It is not BADminton but only GOODminton”). I did not have the stamina to run, kick and shoot, while playing foot ball (He was a small diminutive boy then). That was why I preferred the flower like badminton ball to foot ball. Even the game of Badminton went abroad from here only and got that name, do any one of you know? ( As was His practice, He asks everyone around Him if he knows this; but no one seemed to know about it). I would return home only after playing Badminton after school hours. The enthusiasm in the game would keep extending our play time, without being aware of the time.”
“But whatever be the deep involvement in the game, we never missed ‘SandhyA Vandhanam’. There was a canal near the playground. In order to offer ‘Argyam’ before sunset, we used to stop the game and proceed to the canal. As we played the game as a team, we also went to the canal as a team, washed ourselves, smeared ‘Vibhoothi’ and did ‘SandhyA Vandhanam’. On some days, we used to continue with the game after ‘Sandhi’ in the twilight. We used to sharpen our vision and play till we were able to sight the ball. When we returned home it would be already dark.”
“It was just recently that I had my Upanayanam. Therefore, I was somewhat regular in doing ‘SandhhyA Vandhanam’ although I did not do any ‘Adhyayanam’ or other rituals”
When He said ‘somewhat’, it must have been due to His humility. We cannot accept His statement “I did not do any other ‘Adhyayanam’ or rituals” as it is. Because Periava Himself had once said that after Upanayanam, private tuition was started in Samskrit, and that He had learnt ‘Whatever Brahmacharis used to learn’ . He also mentioned that He used to take ‘Pazhayathu’ (previous day’s left out rice soaked in water and kept overnight) early in the morning, finish His bath in a hurry, go to the tuition class, return home after that, take newly cooked food (whether it was tiffin or meals, He did not mention specifically) and then go to school. Therefore, besides doing ‘Sandhi’, He would have certainly studied a few ‘Veda Sooktam’s and other StOtrams, which all Brahmacharis used to learn. As He did not do ‘ADHYAYANAN’ of RgVEda Samhitai traditional to His family, but only learnt a few Veda Sooktas ( that too from Krishna Yajur Vedas), He might have expressed that way.
I should make a mention of another rare incident here. Sre Mahaperiava’s Guru, who was Peetathipathi for a mere eight days was the son of His aunt (his mother’s elder sister). When Lakshmi Gandhan ( that was His Guru’s ‘PoorvAsrama name) was studying Rg VEdam as a twelve—year old Brahmachari, in Chidambaram, Periava’s father was working in Chidambaram, and so LakshmiGandhan was staying in their house. Child Swaminathan used to hear his ‘Anna’ reciting Vedas and memorized them quickly because of his great memory power. When child Swaminathan also started reciting them the elders blocked him because boys should not recite Vedas before Upanayanam.
(Sree Saranar could not obtain ‘UpadEsam’ from His Guru when He ascended the Peetam. But the AvatAr which came down to protect and nourish Vedas, who wanted to re—affirm the Guru—Sishya hierarchy , and who was the protector of SAstrAs, somehow had to get ‘UpadEsam’ from His Guru and that was why this happened, it seemed.)
After five years, in 1966, when MahaPeriava was camping in Kalahasti, He clarified a few things that happened in His childhood, and at this time talked about the ‘SandhyA Vandhanam’ incident.
“Instead of doing SandhyA Vandhanam inside the house in the atmosphere of an air—tight compartment, it was more convenient and enjoyable to do it in open space, and so, many people would come to the canal to perform ‘Sandhi’. We used to take ‘Vibhoothi’ (sacred ash) from them and smear our body. Generally, after Upanayanam, we used to go to school, wearing ‘SOman’ (Dhoti). While playing, (and climbing trees) we used to fold the dhoti up and tie it. Only on those days when Governor, collector or D.E.O visited the school, we wore trousers. Whether it was dhoti or trouser, we used to remove them and perform ‘Sandhi’, with only ‘Koupeenam’ (foreflap). That is the custom in Kerala also; Brahmacharis should perform ‘Adhyayanam’ clad in ‘Koupeenam’ only. Even now that custom is being followed. Even Acharyal must have followed that custom only.”
Amazing coincidence with Acharyal, even though it happened in the normal course !
We will continue with the ‘Voice of God’, after He returned to Ilayaththankudi.
“When ‘Anna’ came home also, I returned to the house after it became very dark. He got extremely angry. ‘You are a big boss and that is why you are coming home so late. Did we conduct Upanayanam for you just for you to waste it away? Is your game more important than doing Sandhi?”—He blurted out in his anger.”
“I got terribly upset with indignation as he was accusing me of a mistake which I did not commit. I was a pet child at home. My parents had never spoken harshly to me. Therefore, tears started to flow from my eyes. But I did not pour out my anger in words. I did not retort as I felt that he was telling me with a good intention that I should not miss doing ‘Sandhi’ in the proper time. But at the same time, I felt indignant that he was accusing me for something that I did not commit. I even suppressed that feeling and just asked him, ‘ I also know that I should do Sandhi in right time. I am coming after performing in the canal. You are justified in getting angry before I came here as the time was past sunset. But after I came here, without even looking at me properly, if you talk out of turn, how is it justified? Did you not realize after seeing my forehead?’”
Aha ! we do not know what that tender face of the Kumaraswami, with cheeks reddened, and forehead smeared with Vibhoothi, conveyed to the brother! But Periva did not give any hint of that and continued.
“That was all I told ‘Anna’. He was much elder to me and had the right to scold me and beat me. But he felt very bad as if he had committed some mistake which should not have been committed.”
The voice of MahaPeriava, who was narrating the story enthusiastically with a smiling face so far, suddenly broke, but He continued suppressing it.
“The practice, nowadays, of saying “excuse me” for anything and everything, without any regard to age , was not prevalent in those days. In present days the expression does not carry any real feeling but is said as a courtesy. ‘Anna’, although he had so much feeling—only I , who has seen him, know how much was that feeling, and it remains with me till today—- he did not say anything similar (Periava, the epitome of good conduct, did not use that expression of apologizing). It would not have been proper if he had said something like that. But he said something which was much much superior, “ I will do Namaskaram to Swami”—he said this with a voice that melted. He did it to the letter immediately.”
When Periava completed this, He also melted down. Only now, His broken voice came out in the form of glistening tears!
TO BE CONTINUED………