Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 2-Part 2

Jaya Jaya Sankara Hara Hara Sankara – A feast for miracle and compassionate lovers!!!

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.

ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா-Series 2-Chapter 2

மழை பொழிந்தது ! ஐயன் அருள் பொழிந்தது!

காவியம் பல எழுதலாம், சரண–ஹஸ்த மஹிமை காட்ட ஒரே ஓர் உதாரணம்.

1941-ம் ஆண்டு சாதுர்மாஸ்யத்தின்போது ஸ்ரீசரணாள் நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தார். அதனிடையில் ஆடிப் பூரம் வந்தது. வழக்கமாக அப்போது நீலாயதாக்ஷி அம்பாளுக்கு மிகவும் விமரிசையாக உத்ஸவம் நடக்கும். ஆனால் அவ்வாண்டு ஊர் மழை கண்டு எத்தனையோ காலமாகியிருந்த சமயம். சொல்லி முடியா தண்ணீர்ப் பஞ்சம். குளம், குட்டை, கிணறு யாவும் வறண்டு கிடந்தன.

எனவே உத்ஸவத்துக்கு யாத்ரிகர்கள் வர வேண்டாம் என்றே அறிக்கை விடுவதற்குக் கோவிலதிகாரிகள் எண்ணினர். எனினும் அதற்கு முன் தங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள மஹானிடம் விண்ணப்பிக்க நினைத்து ஸ்ரீமட முகாமுக்கு ஒருநாள் காலை வேளையில் வந்தனர்.

அவர்கள் குறையிரந்ததை சோகம் என்றே கூறக் கூடிய ஆழுணர்ச்சியுடன் அருள் மூர்த்தி கேட்டுக் கொண்டார். வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை. சொல்ல அவசியமில்லாமல் அடியோடு முடி அவரது திருவுருவே இரக்கத்தின் உருக்கமாக இருந்தது. மௌனமாகவே பிரஸாதம் ஸாதித்து அவர்களை அனுப்பிவிட்டு ஏகாந்தத்திற்குச் சென்று விட்டார்.

அரை மணி ஆனபின் ஆலயத் திருகுளத்திற்குச் சென்றார். குளமாகவா அது இருந்தது? தள்ளித் தள்ளிச் சில இடங்களில் குளம்படி நீர் தேங்கியிருந்தது தவிர மற்ற இடமெல்லாம் காய்ந்த பூமியாகவோ, சேறாகவோதான் இருந்தது.

தேடித் தேடி ஒரு சிறிய குழியில் தமது சின்னஞ் சிறு ஸ்ரீ சரணங்களை ஸ்ரீசரணர் அழுத்த, சீரார் சேவடி அமிழும் அளவுக்கு -– அந்த அளவுக்கே –- நீர் சுரந்தது.

ஆச்சர்யமாக, தமது அப் பாத நீரையே அவர் சிரஸில் புரோஷித்துக்கொண்டார்!

முகாமுக்குத் திரும்பினார் முனிவர்.

அன்று பகலெல்லாம் கடும் வெயில் காய்ந்தது.

மறுநாள் மதியம். மறுபடி திருக்குளத்திற்குச் சென்றார்.

முன்தினம் கண்ட குளம்படித் தேங்கல்களுங்கூட சேறாகவோ, காய்ந்த கட்டி மண்ணாகவேயோ சுவறிக் கிடந்தன!

இன்று திவ்ய ஹஸ்தத்தாலேயே அவற்றிலொரு சேற்றுத் திட்டைச் சுரண்டினார். ஒரு சில துளிகள் நீர் சுரந்தது.

வலப் பாதப் பெருவிரலை அதில் ஐயன் அமிழ்த்த, அது போதும் போதாததாக முழுகியது.

திருவிரல் நீரில் நனைந்திருக்க, நனைந்த திருவுள்ளத்தோடு ஐயன் ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கினார்.

ஈரப்பசையே இல்லாத வெண்மேகங்கள் ஆங்காங்கு மூடியிருந்தாலும் பெரும்பாலும் தெள்ளிய ஒளி நீலமாகவே வானம் விளங்கியது. வானை நோக்கிய ஸ்ரீசரணாளின் திருமுகமும் அவ் வானமாகவே விளங்கியது -– கருணா சோக (கருண ரஸம் என்பதே சோகந்தானே?) மேகம் மூடியுங்கூட, மூடவொண்ணா அகண்ட அமைதி வெளியாக!

தண்டத்தை இறுகப் பிடித்தவாறே, வானை நோக்கி இரு கரங்களையும் தூக்கி அஞ்சலி செய்தார்.

அருளும் அமைதியும் இனம் பிரிக்க முடியாமல் செறிந்திருந்த மௌனத்துடன் மட முகாமுக்குத் திரும்பினார்.

பிற்பகல் நான்கு மணி அளவில் ஈரமற்ற வெண்முகில்கள் குளிர் நீலமாக மாறத் தொடங்கின. வெப்பத்தைச் சமனம் செய்யும் சீதக் காற்றும் மெல்ல வீசலாயிற்று,

சிறிது பொழுதில் சிறு தூறல்கள் சிதறலாயின.

அப்புறம் அது அடர்ந்து அடர்ந்து அப்படியே அடைமழையாகப் பொழியலாயிற்று!

இரவெல்லாம் பொழிந்தது.

மறுநாள் முழுதும் பொழிந்தது.

அதற்கு மறுநாளும், ஏன், நான்காம் நாளுங்கூட விடாமல் பொழிந்தது.

நிமலனின் அருள் வேண்டுதல் வடிவில் தூண்ட, நீலாயதாக்ஷி நீலவானையே கண்களாகக் கொண்டு கருணா கடாக்ஷப் பெருக்காகப் பொழிந்து தீர்த்தாள்.

நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையே!

என்ற வாதவூரர் வாசகம் மெய்யாயிற்று.

குளம், குட்டை, கிணறு எல்லாம் முட்ட முட்ட நிரம்பின.

ஊர் குளிர, ஊரார் உளம் குளிர உத்ஸவமும் வழக்கத்தைவிட விமரிசையாக நடந்தேறியது. வாடிய நெஞ்சங்களுக்கு வான் கருணை வழங்கிய உத்ஸாஹத் தளிர்ப்பே உத்ஸவ விமரிசை வழக்கத்தைவிடக் கூடியதற்குக் காரணம்.

இந் நிகழ்ச்சிக் கோவையை உடனிருந்து கண்டு உவகையோடு வர்ணிக்கும் செல்லம்மாள் (சென்ற ஆண்டு — 1993 –ல் -– பரம பதம் எய்திய நீண்ட காலப் பரம பக்தை) சொல்வாள்: “கோவில்காரர்கள் யாத்ரிகர் வர வேண்டாம் என்று அறிவிப்பு செய்ய நினைத்தார்கள். பெரியவாளோ ஆகாச ராஜனையும், வருண பகவானையும் கொண்டு அம்பாள் உத்ஸவக் கல்யாணத்திற்கு அத்தனை பேரும் வருவதற்கு அழைப்பு அனுப்பி விட்டார்! கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால் நம்முடைய குரு பரமாத்மாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கன மழையை வருவித்து விட்டார்!”

ஆயினும் கண்ணன் போலத் தெய்விக மஹிமையை வெளிக்காட்டாது ஸ்ரீ ராமனைப் போல மானுடமாகவே எளிமை காட்டியவரன்றோ நம் பரம குருநாதன்? அதனால்தான் ஸ்ரீ சரண மஹிமையை மறைத்துக் கரங்களை எளிமையில் குவித்து வானை நோக்கி அஞ்சலி செய்தே மழை வருவித்ததாகக் காட்டினார்.

__________________________________________________________________________________________________________________________

We can write many an epic to show the greatness of ‘SARANAM’ and ‘HASTAM’, but we will just see one example.

During the ‘ChAturmAsyam’ in 1941, Sree SaranAl was camping in Nagapattinam. ‘Adi Pooram’ came during that period. As usual, a temple festival for Sree NeelAyadhAkshi AmbAl used to be celebrated every year in a grand manner. But it has been a long, long time since it rained in that place. There was severe scarcity for water. All the wells and ponds had dried up.

The temple officials thought of sending an announcement requesting the devotees (who travel from outside) not to come there. But before that, they wanted to appeal to the Mahan who had come to their place and went to Sree Matam camp on a morning to see Him.

The epitome of compassion heard their tale with a deep feeling of sorrow. He did not utter a word. There was no need for it as His whole body from head to toe was compassion personified. He gave them ‘PrasAdham’ silently, and went to solitude.

After half an hour He went to the Temple pond. Was it a pond ? Except a few places of handful of water, the remaining expanse was either dry or mud.

After some search, He found a small hole with water and pressed His small feet into that. Water came up barely covering His feet.

Surprisingly, He sprinkled this water on His head!

The Sage returned to the camp.

The sun burnt the place the whole day.

He went to the Temple pond again the next afternoon.

Whatever little holes of water were there the previous day, had dried up into mud.

With His Divine ‘Hastam’, He burrowed one of the dried up holes. A few drops of water oozed out. He pressed the toe of His right leg into it. The toe barely got immersed.

With His toe wet with the few drops of water, the great soul, cool with compassion, raised His head towards the sky and looked at it.

The sky, though scattered here and there with white clouds devoid of any traces of moisture, was a clear blue expanse.

Sree Saranal’s Divine face which was uplifted towards the clear sky, was also like the latter. Even though the sorrow was covering it, it was an expanse that could not be covered.

Holding His ‘Dhandam’ tightly, He raised His two hands and did ‘Anjali’ (obeisance).

He, then returned to the camp with a face filled with compassion and peace.

Around 4 O’clock in the evening, the moisture–less white clouds, started turning to a cool blue. Cool breeze started blowing.

Shortly, it started drizzling.

Then slowly and steadily, it started raining heavily.

It rained throughout the night, right through next day and the third and the fourth day also.

Induced by the prayer of the Mahan, Sree NeelAyadhAkshi, through the blue sky as Her eyes, showered Her love and compassion on them.

Ponds, lakes and wells got filled to the brim.

With the place and the people having been cooled by the plentiful rain, the festival was celebrated elaborately.

SellammAl, a long time devotee of Periava, (she attained the lotus feet of the Lord in 1993), who was a happy witness to the above incident, used to describe it thus:” The temple officials thought of sending a message requesting the traveling devotees not to come there. But Periava, with the help of the ‘AkAsa Rajan’ (king of the sky) and ‘Varuna Bagavan’ sent the invitation to everyone, to come and participate in the festival ! While Krishna ParamAtmA lifted the mountain with His finger, above His head to protect the devotees from the rain, Our Periava just pressed the earth with His toe and brought the rain!”.

But our GurunAthar, unlike Kannan who showed His Divine power, only showed His simplicity like Sree Raman ! That is why, He hid the greatness of ‘Sree Saranam’, and showed to the world that He brought the rain by paying His obeisance with folded hands towards the sky.

இதை பகிர:

எங்களை தொடர்பு கொள்ளவும்