ரா. கணபதி அண்ணா
படைப்புகள்
அன்புடையீர், நமஸ்காரம்
பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம்.
காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் (kamakoti.org), Internet Archive என்ற இணையதளத்திலும் (DeivathinKural) தெய்வத்தின் குரல் நல்ல முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெய்வத்தின் குரல் தவிர ரா. கணபதி அண்ணா எழுதிய இதர நூல்களும் ஏராளம். எனினும், ரா. கணபதி அண்ணாவின் இதர நூல்கள் பொதுவெளியில் கிடைப்பதில்லை.
தெய்வத்தின் குரல் தவிர்த்த அண்ணாவின் இதர நூல்கள் அனைத்தும் வாசகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
தற்போது அண்ணாவின் 25 நூல்களை பிடிஎஃப் வடிவத்தில் இதில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். அண்ணா எழுதி நூல் வடிவில் வெளிவராத இரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம்.
அண்ணா கொடுத்த பேட்டி ஒன்றையும் இதில் வெளியிட்டுள்ளோம். மேலும், அண்ணா பற்றி அன்பர்கள் சிலர் எழுதியுள்ள கட்டுரைகள் சிலவற்றையும் இதில் தொகுத்திருக்கிறோம். அண்ணாவின் புகைப்படங்கள் சிலவற்றையும் இதில் பதிவேற்றியுள்ளோம். (இவை முகப்பில் உள்ள ரா. கணபதி பற்றிய தகவல்கள் என்ற பகுதியில் உள்ளன.)
மேலும், சில நூல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் உறுதிகூறுகிறோம்.
இப்படிக்கு,
அண்ணாவின் அன்புத் தம்பியர் சிலர்
சங்கரா
யார்கொலோ சதுரர்?
ரா. கணபதி படைப்புகள்
நீங்களும் உதவலாம்
பின்குறிப்பு 1:
இந்த நூல்களை ஆன்லைனில் படிக்க முடியாதவர்கள் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
பின்குறிப்பு 2:
இந்த நூல்கள் அனைத்தின் பக்கங்களும் A5 அல்லது B5 அளவில் உள்ளவை. (இது A4 காகிதத்தில் பாதி சைஸ்) வயதானவர்களுக்கு இவற்றைப் படிப்பதில் சிரமம் ஏற்பட்டால் Fit to page என்ற option மூலம் A4 காகிதத்தில் லேசர் பிரின்ட் எடுத்துப் படிக்கலாம். (1. இவ்வாறு ப்ரின்ட் எடுக்கும்போது எழுத்துகள் பெரிய அளவில் அச்சாகும். 2. இந்தப் பக்கங்களை ஸ்பைரல் பைன்டிங் பண்ணி வைத்துக்கொள்வது நல்லது. 3. காகிதத்தின் இரண்டு பக்கங்களிலும் – back to back – அச்சிட்டால் புத்தகத்தின் எடையும் குறையும், செலவும் குறையும்.)
வெளிவராத கட்டுரைகள்
பகிர்ந்துகொள்ளலாமே
நிதி உதவி
ஆலோசனைகள்
அனைத்து அன்பர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளோம். இந்தத் தளத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
அதேபோல, தளத்தை முன்னேற்றுவது குறித்துத் தங்களுக்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தாலும் எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.